அடம் பிடிக்கிறது அடர்ஒளி

Spread the love

 

செல்மா மீரா

 

 
 போலிகளின் 
சாமர்த்தியங்கள்
கொடூரத்தின் அடர்ஒளியில் உச்சிமுகர்கின்றன
சில சந்தர்ப்பங்கள்
 
வார்த்தைகளின்
வெப்பச்சூட்டில்
உராய்கின்றத் தத்துவங்கள்
விவாதப் பொருள் படைத்த
வித விதமான வித்தைகள் சூட்சுமங்களின் ஒத்திசைவுகள்
அடக்க முடியாப் பெருமையில்
பித்தாகித் சிரிக்கின்றச்
சிக்கல்கள்
 
உறக்கத்தின் பிடியில்
கைநழுவுகின்றக் கனவுகள் போல்
அடம்பிடிக்கிறது.
 
செல்மா மீரா.

Series Navigationநாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்வடகிழக்கு இந்தியப் பயணம் : 12