அப்பாவும் பிள்ளையும்

சந்தோஷ் குமார் மோகன்

காலை பற்றும் மழலை யை

அள்ளி தூக்கி அண்ணா ந்து பார்ப்பான்,

தோள்களில் வைத்துக் கொண்டாடுவான்,

பல்லக்கு தூக்கி அழகு பார்ப்பான்,

தன் பிள்ளைகளை உயரத்தில் வைத்தே பழக்கப்பட்ட இதயம் அப்பா…!!!

***********************

அவனை தூக்கி விளையாடிய உப்பு மூட்டை

இனிப்பு மூட்டை ஆனது.

************************

நித்தம் ஏதாவத ஒன்றை கேட்கிறான், 

நானும் நாளைக்கு வாங்கி தருகிறேன் என்றே நித்தமும் கடக்கிறேன்,

நேற்றும் இதை தான் சொன்ன என்று அவன் கேட்டதே இல்லை, 

குழந்தைகள் ஒரு வரம்.

***********************
கா கா கதை, 

பாட்டி கதை, 

நிலா கதை, 

கேட்டு தூங்காமல் 

தூங்காம கதைய சொல்லுப்பா என்கிறான்.

***********************
கண்டிக்கும் நேரங்களில்

அவன் வெம்பி வெம்பி

ஆணிகள் இல்லாமல் என்னை சிலுவையில் அறைகிறான்.

***********************

அவன்
கையசைத்து கையசைத்து பல சின்னஞ்சிறு கதைகள் பேச 

மனசுக்குள் றெக்க முளைக்கும்

பட்டாம்பூச்சிய வம்புக்கு இழுக்கும்.

***********************
அவளுக்கும்,எனக்கும் சண்டை, 

அவன் சமாதானமாக சில நாட்கள் ஆகிறது.

***********************

அப்பா இது நம்ப வீடு இல்லையா ப்பா. 

நம்ம வீடு தாம்ப்பா, 

அந்த தாத்தா (House Owner) அவங்க வீடு னு சொல்றாங்க.

???

***********************

நேற்று

இன்று

நாளை

காலங்களை பற்றிய எந்த கவலையும் இன்றி, 

காலத்தை 

கால்பந்து போல எட்டி உதைத்து விளையாடும் குழந்தைகளின் உலகம் மகத்தானது.

***********************
சந்தோஷ் குமார் மோகன்,

தஞ்சை.

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்யாம் பெறவே