அமீரின் ஆதிபகவன் – “கலாச்சார தீவிரவாதத்தின் உச்சம்”

புனைப்பெயரில்
”அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு”
வள்ளுவம் சொல்லும் வாழ்வு முறை.
“ஆதிபகவன்” என்ற வார்த்தை தமிழர்களின் உணர்வோடும் வாழ்வோடும் கலந்த வார்த்தை.
கடவுள் மறுப்புச் சொல்பவர் கூட தாய்க்கு சிலை வைத்து பூஜை செய்யும் கலாச்சாரம் பிண்ணிப் பிணைந்த இனத்தின் மொழியில் “ஆதிபகவன்” என்ற சொல்லிற்கு உயிர்ப்பான அர்த்தம் உண்டு.
உலகின் ஆதியான கடவுளையும் மொழியால் சொல்லப்படும் அர்த்தங்களையும் இணைப்பாக கொண்ட குறளால், பூஜிக்கப்படும் ஒரு இனத்தின் வரிகளின் வார்த்தை “ஆதிபகவன்”
ஆதிபகவன் -> இயேசுவா, அல்லாவா, கிருஷ்ணனா, ராமனா, பாபாவா, புத்தரா, என்று எந்தக் கோணத்தில் ஒரு விவாதத்திற்கு அப்பெயர் உபயோகப்படுத்தப் பட்டிருந்தால் கூட இங்கு யாருக்கும் விசனமில்லை…
ஆனால், ஆதி என்பது ஒரு மூன்றாந்தர ரவுடி பொறுக்கி – டீசண்டா சொல்லனும்னா “டான்” – பெயர். சரி, பகவன்..? அவன் இன்னொரு அரவாணி பொறுக்கி.
(பருத்தி வீரனிலும் இவர் அரவாணிகளை தரம் தாழ்த்தியிருப்பார்.. என்ன கேடு கெட்ட சிந்தனையோ)
ஆதிபகவன் என்பது இணைப்பு வார்த்தை என்றால், இவர் சொல்வது இரு பொறுக்கிகளின் சங்கமம் என்றாகிறது.
யாருடைய கடவுள் மிக மிக உண்மையானது, அதாவது ஆதியானது என்ற தர்க்கம் உலகமெங்கும் உண்டு.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் “அன்பழகன்” சென்னை தி.நகர் பகுதிகளில் தனக்கென ஒரு மரியாதையான வட்டத்தைக் கொண்டுள்ளவர். சென்னை திமுகவின் முக்கிய அங்கம்.
திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளரான திரு.ஸ்டாலினினிடம் விசுவாசம் கொண்டவர்.
அவர் எப்படி திரு.ஸ்டாலின் துணைவியார் திருமதி.துர்க்கா அவர்களின் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக “ஆதிபகவன் பெயரைக் கேவலப்படுத்தும் இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தாரோ தெரியவில்லை.
அவருக்கென்ன நடிகரோ, இயக்குனரோ கிடைக்கவில்லையா என்ன..?
இல்லை இந்த குப்பைக்கு கொடுத்த பணத்திற்கு கலைஞர் டிவியில் தொடர்கள் எடுத்திருந்தால், அந்த டிவியாவது முன்னிலை வர ஏதுவாகியிருக்கும்.
சரி அதை விடுங்கள், தமிழகத்தில் இன்று திருக்குறள் இன்னும் இருப்பதற்கு பல காரணங்களில், கலைஞரின் பங்களிப்பும் உண்டு.
வள்ளுவர் கோட்டம், குமரி வள்ளுவரின் வானுயர்ந்த சிலை, குறளோவியம் என்றெல்லாம் – எக்காரணமாயினும் – கலைஞர் வள்ளுவன் & குறளின் புகழை முன்னெடுத்து செல்பவர்…
அதற்கு மாறாக அன்பழகன் ஏன் தமிழனின் அடிநாதமான “ஆதிபகவன்” என்ற பெயருடன் சினிமா எனும் வலிமையான ஆயுதம் கொண்டு அப்பெயர் மேல் காறி உமிழ துணை போக வேண்டும்..?
கலைஞர் கொண்டாடும் ஒரு விஷயத்தின் மேல் காறி உமிழ்வது, அவரையே அவமானப்படுத்தும் செயல் தானன்றி வேறென்ன…?
நல்ல வேளை, காட்டுத்தன வன்முறை ரத்தக்களறி காட்சிகள் கொண்ட இந்த படத்திற்கு “ஏ” சட்டிபிகேட்டுமட்டுமின்றி
ஒரு புத்திசாலித்தனமான விஷயத்தையும் சென்சார் போர்டு செய்தது,
ஆதிபகவன் படப்பெயரை , ”அமீரின் ஆதிபகவன்” என மாற்றச் சொன்னது.
அமீர் சுல்தான் கேவலப்படுத்த நினைத்தது அவரின் ஆதிபகவனை என்றாகிப்போனது
சென்சார் போர்டிற்கு நன்றி.
இனி இதற்கு 24 முஸ்லீம் இயக்கங்கள் தான் கட்டப்பஞ்சாயத்து செய்தல் வேண்டும்.
அமீர் சுல்தான் அவர்களே, 600 வருடங்கள் கொடுங்கோலரின் வாள்முனை தாண்டிய கலாச்சாரம் கொண்டது, திருக்குறள் இனம்.
”போலீஸை விலக்கி கொள்ளுங்கள், எத்துனை இந்துக்கள் சாகிறார்கள் என்று பாருங்கள்” என்று ஹைதராபாத்தில் ஒரு தீவிரவாதி சொன்னானாம்… அழிவுப்பாதையில் பூப்பது மலர்கள் அல்ல… அவை தீய விஷச்செடிகளே..
ஆனால், நாங்கள் சொல்கிறோம்,
“ராணுவம், போலீஸ் பாதுகாப்புடனே, எல்லா இஸ்லாமிய நாடுகளையும் எங்களிடம் ஒரு வாரம் தாருங்கள்- ஆனால், “கருத்துச்சுதந்திரத்துடன்-
அப்புறம், எத்தனை பேர் தொடர்ந்து முஸ்லீமாக இருப்பார்கள் என்று பாருங்கள்” என்கிறோம்.
அதை ஏற்கனவே ஃபேஸ் புக் நிரூபித்துள்ளது.
துப்பாக்கியும், விஸ்வரூபமும் கருத்துச் சுதந்திரத்துடன் சொல்லப்பட்ட உண்மைகள்.
அதை, வன்முறையால் ஒரு கும்பல் தடுக்கும் முயற்சியில் நீங்கள் என்ன நிலை எடுத்தீர்கள் என்று உலகறியும்.
ஆனால், ”அமீரின் ஆதிபகவன்” , எப்படியான தமிழர் கலாச்சார அடையாள வார்த்தையான குறளின் ஆதிபகவன் மேல், காறி உமிழும் சரக்காக இருப்பினும் நாங்கள் அதை அனுமதித்துள்ளோம்…
அது தான் நாங்கள், எங்களின் சாத்வீக நல்லினம்.
கண்மூடி நீங்கள் மேற்கு நோக்கி தினம் மண்டியிட்டு தொழுகையிலே, இனி நித்தம் உங்கள் மனதில் நீங்கள் மிக மிக மோசமாக ஒரு இனத்தின் நம்பிக்கையை, ”அதிபகவன்” என்ற வார்த்தையை கேவலப்படுத்த முயற்சித்ததன் பாவ நிலை வந்து போகும்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மிருகமும், மனிதமும் உண்டு.
மிரட்டலும், உருட்டலும், கருத்து வன்முறையும் பிறரில் இருக்கும் மிருக எண்ணத்தை தூண்டி விடும்.
ஆனால், சகிப்புத் தன்மையும், அன்பும், அரவணைப்பும் மனிதத்தை விஸ்வரூபமாக்கும்.
ஆனால், சகிப்புத்தன்மையின் அருமை புரியாத போது, காளி நிலை விஸ்வரூபம் வரவே செய்யும்.
உங்களுக்கு எப்படி, அல்லா, முகமது என்ற வார்த்தைகளோ ,அது போலவே, எங்களின் திருக்குறள் இனத்திற்கு, “ஆதிபகவன்”
அந்தப் பெயரை மூன்றாந்தர ஆண் டானுக்கும், இன்னொரு பெண்களோடு மோகிக்கும் அரவாணி டாணுக்கும் ஏன் வைத்தீர்கள் …?
உங்களுக்கு தெரியாததல்ல… அரேபியர்களின் மோகப்பொருளாய் ஆகிப்போன அரவாணிகளை கூட நாங்கள் வழிபாட்டு இனமாய் ஆக்கி அவர்களுக்கு மனரீதியான நிம்மதி தருபவர்கள்.
காலச்சக்கர்த்தின் தூசுகள் நாம்.
பயண வேகத்தில் உதறப்படும் தூசுகளில் ஒன்று நீங்களும் என்று உணருங்கள்
ஆனால், சத்தியமும் லட்சியமுமாய் வாழ்ந்தால் தூசு கூட பயணப்பாதையில் விருட்சமாய் மாறும் விதையாகலாம்.
உணர்வீர்களா ..?
மேலும், அப்படி உங்களுக்கு உண்மையிலேயே இதே தைரியம் இருந்தால், இதே கதாபாத்திரங்களுக்கு அல்லா முகமது என்று பெயர்கள் வைத்து,
“அமீரின் அல்லா முகமது” என்று ரீலீஸ் செய்யுங்கள். உலகின் எந்த மூலை மொழியில் எனினும்.
அப்போது தெரியும் சகிப்புத்தன்மை என்றால் என்னவென்று…
”இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்”
இதையும் “ஆதிபகவன்” என்று எங்களுக்கு அறிவுச்சுடர் காட்டிய வள்ளுவம் சொல்கிறது.
”ஆதிபகவனை” கொண்டாடும் எங்களின் பரதேசி பாலாவிடம் கற்ற மிச்சத்தை ராம் படமாக கண்டு சினிமாவில் காலூண்ற உதவியதே உங்களுக்கு எங்கள் இனம் செய்த நன்றி…..
<< ஆதிபகவன் இனத்தவனின் குமுறல் இது >>

Series Navigationஸ்பெஷல் 26 ( இந்தி) – சிறகு ரவி.தீப்பற்றிக் கொள்ளும் வார்த்தை