அம்ஷன் குமார் “ஆவணப்பட இயக்கம்” நூல் வெளியீடு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 8 in the series 6 ஜனவரி 2019
ஆவணப்படங்களுக்கான தேவைகள் முன் எப்போதையும்விட இப்போது அதிகம் உணரப்படுகின்றன. ஆவணப்படத் தயாரிப்புகளும் அவற்றின் வெளியீடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. டிஜிடல் உபகரணங்களின் வரத்துக்குப்பின் யார் வேண்டுமானாலும் படங்களை எடுக்கலாம் என்கிற நிலைமையும் உருவாகியுள்ளது. ஆனால் ஆவணப்படத்தை தொழில்பயன்பாட்டிற்காகவோ கலைவெளிப்பாட்டிற்காகவோ  தனிப்பட்ட தேவைக்காகவோ உருவாக்க அதன் அடிப்படைகளை அறிந்துகொள்வது மிக அவசியம். முன்பின் திரைப்பட அனுபவம் இல்லாதவர்களும் எளிதாக அவற்றைக் கற்றுகொண்டு ஆவணப்படம் எடுக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஆவணப்படத்திற்கு வர்ணனை எழுதுதல்
நேர்காணல் செய்தல்
படப்பிடிப்பு நடத்துதல்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியன செய்தல்
பட்ஜெட் தயாரித்தல்
நிதியுதவி பெறுதல் போன்ற அனைத்தும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
இந்நூல் ஆசிரியர் அம்ஷன் குமார் இயக்கிய ஒருத்தி, மனுசங்கடா ஆகிய முழுநீளக் கதைப்படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் விருதுகளும் கிடைத்துள்ளன.கால் நூற்றாண்டாக ஆவணப்படங்களை எடுத்து வருபவர். ஆவணப்பட இயக்கத்திற்கான தேசிய விருதினைப் பெற்றவர்.
Series Navigationதுணைவியின் இறுதிப் பயணம் – 7சபரிமலை – தொடரும் போராட்டங்களும் வாதங்களும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *