அய்யனார் கதை

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

அய்யனாரும் ஒரு காலத்தில்

பக்காவான கோபுரம் வைத்த

கருங்கல் கட்டட கோயிலுக்குள்

சப்பாரம் தேர் என்று

சகல வசதிகளுடன் இருந்தவர்தான்.

கோயிலுக்குள் இவன் நுழையக்கூடாது,

தேர் அவனிருக்கும் தெருவுக்குள் போகக்கூடாது

என்பன போன்ற சண்டைகளால்

தேர் எரிந்து கோபுரம் தகர்ந்து

தெருவுக்கு வந்துவிட்டார்.

இப்போது பாகுபாடில்லை

பண்டிகை மோதல் இல்லை

ஊருக்கு வெளியில் இருந்தாலும்

எல்லோர் உள்ளத்திலும் அய்யனார்.

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationசென்னை மழையில் ஒரு நாள்நித்ய சைதன்யா – கவிதை