அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …

புனைப்பெயரில்

……கிருஷ்ணம்மாளும் ஜகனாதனும் , ஊழலற்ற ஜனநாயகத்திற்கான ஜேபியின் இயக்கத்தை ஆதரித்து, பீகார் சென்றனர்.

1975-ல் இந்திரா காந்தி , எமெர்ஜென்சியை அறிவித்த போது நாடெங்கிலும் பல நூறு தேசிய உணர்வும், நாட்டுப்பற்றும் கொண்டோர் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதில் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவருள், அய்யா ஜகநாதனும் ஒருவர்.
அது பற்றி அவர் சொல்லும் போது, ”அச் சிறைவாசம் பிரிட்டிஷாரின் சிறைக் கொடுமையை விட கொடியதாக இருந்தது” என்கிறார்.

ஆம், அவர் பணக்கார குடும்பத்தில் பிறந்து இருப்பினும் ஏழை கூலித்தொழிலாள குடும்பத்தைச் சேர்ந்த தலித் பெண்மணியை மணந்தவர்.
சுதந்திரப்போராட்டத்தில் சிறை சென்றவர்.
பின், வினோபா அவர்களின் பூமிதான இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
கீழ்வெண்மணி பிரச்சனை வெளி உலகிற்கு தெரிய வந்த போது, டில்லி அரசாங்க வேலையில் இருக்கும் தகுதியால் ஒரு கதையெழுதி சாகித்ய அக்காதம்பி அவார்டோ..
இல்லை, கவிதை எழுதியோ, கதையெழுதியோ சொறிந்து கொள்ளாமல்,

களப்பணிக்கு மனைவியுடன் கீழ்வெண்மணி சென்று பல ஆண்டுகள் தங்கியிருந்து மக்கள் சேவை செய்தார்.

நக்சைல்ட்டுகள் பிரச்சனையின் போதும் களத்திற்கு சென்று போராடியவர்.

வயதான உடன் வெண் தாடியும், நீண்ட முடியுமாய் இல்லை மழித்த தலையுமென வேஷம் தரிக்காமல்,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்ததை ஒழித்து விடின்

எனும் குறளுக்கு ஏற்ப வாழ்ந்த பெருந்தகை.
அவர், திண்டுக்கல் காந்திகிராம கஸ்தூர்பா மருத்துவமனையில் 13ம் தேதி  இறந்தார்.

அன்னாருக்கு நம் வந்தனங்கள்.

எந்த எதிர்பார்ப்புமற்ற சேவை செய்த இவர் இறை தூதர் தானே…

http://en.wikipedia.org/wiki/Krishnammal_Jagannathan

புனைப்பெயரில்

Series Navigationஅமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்