அருணா சுப்ரமணியன் கவிதைக்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 10 in the series 1 அக்டோபர் 2017

அருணா சுப்ரமணியன்

1 .படையல்…

இலையில் படைத்த
பொங்கல்
அப்படியே இருக்க..
வழியில் சிந்திய
பருக்கைகளை
உண்டு மகிழ்ந்தன
எறும்பு தெய்வங்கள்…

2. காணிக்கை

தினமொரு
பட்டுச்சேலை
காணிக்கை…
அம்மனோ
கோயில்
வாசலில்
கந்தலில் …

3. சேரும் சிதறல்…

சிதறடித்த துண்டுகளை
ஒவ்வொரு முறையும்
பொறுக்கி சேர்க்கிறேன்…
சிறிதும் யோசிக்காமல்
தட்டி விடுகிறாய்…
சிதறுவதும்
சேர்வதுமாய் நான்…

Series Navigationசிறகு விரிந்தது – சாந்தி மாரியப்பனின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *