அருந்ததி ராய்: நிகழ் நிலையில் விதைந்தாடும் சொற்கள்

Spread the love

நஸார் இஜாஸ்

வழமை போன்ற ஆரோக்கியத்துடன் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஒரு தாயின் கர்ப்பச் சுருளிலிருந்து ஒரு பெண் குழந்தை மெல்ல வெளியுலகை எட்டிப் பார்க்கிறது. அப்போது அந்தத் தாய் வெறுமனே குழந்தையாகவே அவளை பார்த்திருக்கலாம். அது இவ்வுலகை மாற்றப் போகும் சக்தியாக இருக்கும் என்று தெரியாமல் இருந்திருக்கலாம். எழுத்தையும், போராட்டத்தையும் அடையாளமாகக் கொள்ளப் போகும் அற்புதம் அந்தக் குழந்தையின் அணுத் திறன்மங்களில் சேகரிக்கப்பட்டிருப்பதை அறியாமல் போயிருக்கலாம்.
கற்பனைத் திறன்களில் வெளிப்படும் எழுத்துக்களையும் தாண்டி யதார்த்தம் பளிச்சிடும் எழுத்துக்களில் ஒரு வித வசீகரம் தோன்றுமே, அதை உற்பத்தி செய்யப் போகின்ற கைகள் அக்குழந்தையின் பிஞ்சு விரல்கள் என்பதை அறியாமல் போயிருக்கலாம். பலமாகக் கட்டமைக்கப்பட்ட சக்தியாக இருக்கும் அவளுடைய தாயிடம் இப்போது சொல்லி வைக்கலாம். இவள் கருவிலேயே கட்டமைக்கப்பட்ட சொற்களின் சொந்தக்காரி. அப்படிப்பட்ட யதார்த்த ஜாலங்கள் அருந்ததி ராயின் சொற்களில் பொதிந்திருக்கின்றன.
அருந்ததி ராய் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர். அதுவும் மிகச் சிறிய வயதில் இப்பரிசைத் தட்டிச் சென்ற ஒரேயொரு இந்தியர் ஆவார். இந்த விடயம்தான் நான் அவர் பற்றிய தகவல்களைத் தேடிப் பெற ஊக்கமளித்த ஆரோக்கியத்துளிர்.
அருந்ததி ராய் நாவலாசிரியரும், தீவிர செயற்பாட்டாளருமாவார். இவர் எழுதிய வுhந பழன ழக ளஅயடட  வாiபௌ என்ற நாவல் மிகப் பிரபலமானது. இந்த நாவலுக்காகத்தான் உலகின் பிரபலமான புக்கர் பரிசை 1997 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். இந்நாவல் ஒரே மாதத்தில் 21 நாடுகளில் விற்று சாதனை படைக்கப்பட்டது. இந்நாவல் தமிழில் ‘கடவுளின் சின்ன விஷயங்கள்’ என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலுக்குப் பிறகு அவருடைய எந்த நாவலும் வெளிவரவில்லை.
2004 மே மாதம் சமூக செயற்பாடுகளுக்காகவும் ஹிம்சைக்கொதிராக ஆவேசக் குரல் கொடுத்ததற்காகவும் சிட்னி சமாதான விருதைப் பெற்றுக் கொண்டார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்க சாகித்திய அகாதமி விருதை மறுத்து விட்டார். இதற்கான காரணத்தைப் பின்னர் பார்க்கலாம். கட்டுக் கதையல்லாமல் யதார்த்தங்களை அதன் யதார்த்தம் குன்றாத வகையில் அப்பட்டமாகக் காட்சிப்படுத்தும் இவரது எழுத்துக்களில் பொதிந்திருக்கும் வசீகரம் வாசிப்போரில் ஒரு வித காட்சி பீடத்தினை மனத்திரையில் நிழலாடச் செய்து விடுகிறது.
அருந்ததி ராய் 1961 நவம்பர் 24 மேகலாயாவில் உள்ள ஷில்லாங் எனும் இடத்தில் பிறந்தார். இவருடைய தாய் மேரி கேரள கிறிஸ்டியனும் தந்தை பெங்காளி இந்துவமாவார். அருந்ததி ராயின் தந்தை தேயிலை நடும் தொழில் செய்பவர். காதலித்துத் திருமணம் செய்த இவர்களது திருமண வாழ்வு வளைவு நெளிவுகளோடு பயணிக்கையில் குழந்தை பிறந்த பின் இருவரும் தனிப்பட்ட காரணங்களைச் சொல்லிப் பிரிந்து விட்டனர். இதனால் அருந்ததி ராய் தன் வாழ்வின் பெரும் பகுதியை தனது தாயுடன் கேரளாவின் ஐமனம் எனும் கிராமத்தில்; செலவளிக்க வேண்டியிருந்தது.
தனது தாய் அவருக்கு அன்பளிப்புச் செய்யும் ஒரு பொருட்களில் அதிகமானவை புத்தகங்கள்தான். அந்தப் புத்தகங்கள் அவருக்குள் தன்னம்பிக்கையையும், மனோதிடத்தையும் அவருக்குள் பதியமிட்டன. தனது ஐந்தாவது வயதில் தான் படித்த மிஷனரியில் பயின்று கொண்டிருக்கையில் தனது ஆசிரியரால் இழிவு படுத்தப்பட்டார். எப்போதுமே அந்த ஆசிரியரின் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகள் இவைதான். உனது கண்ணில் சாத்தான் இருப்பதை நான் அவதானிக்கிறேன். இந்த வார்த்தை அவருக்குள் கோபத்தைக் கிண்டி விட்டது. அதற்கு பதிலடியாக ஒரு குறிப்பை அவர் தனது பயிற்சிப் புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவை நான் இப்போது எனது புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்று ஒரு குறிப்பில் அருந்ததி ராய் சொல்லியிருக்கிறார்.
அதனாலோ என்னவோ, இவருடைய புத்தகம் அருந்ததியின் சுயசரிதை நூல் என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தக் கேள்விக்கு தெளிவான பதிலை அருந்ததி ராயே சொல்லியிருக்கிறர். வார்த்தைகளில் வர்ணிப்புக்கள் இருந்தாலும் கூட அவை ஒவ்வொன்றும் நிஜத்தின் நிகழ் நிலையையே பிரதி பலிக்கிறது. இக்கருத்தை அவர் ஏற்றுக் கொள்கிறார்.
புத்தகங்கள் மீதான அதீத ஆர்வம் அவரை வாசிப்பின் உச்ச கட்டத்துக்குக் கொண்டு சென்றது. புத்தகம் வாங்குவதற்காக அம்மாவைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்ற எண்ணத்தில் தொழில் செய்து கிடைக்கும் வருமானத்தில் புத்தகங்களை வாங்க நினைத்தார். இதற்காக நட்சத்திர ஹோட்டல்களில் எரோபிக்ஸ் வகுப்பு நடாத்தினார்.
பிற்பாடுகளில் 16 ஆவது வயதில் நியூடெல்லிக்குத் திரும்பிய இவர் தனது எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டும், கட்டிட வடிவமைப்பில் கொண்ட அதீத ஆர்வமும் அவரை கட்டிட வடிவமைப்புத் துறையில் கற்கும் ஆர்வத்தைத் மென்மேலும் அதிகரிக்கச் செய்தது. நியூடெல்லி பாடசாலையில் இணைந்து கட்டிட நிர்மாணக் கலையைப் பயின்றார்.
அங்குதான் தன் வாழ்வை மாற்றப் போகும் அழகிய தருணம் பட்டாம் பூச்சிகளாய் மன அலைகளில் பறந்தோடியது. அந்தப் பட்டாம் பூச்சி தருணங்கள் அழகிய ப்ரியங்களை அவரில் மீளவும் உற்பத்தி செய்து கொண்டே இருந்தது. அங்கு தன்னோடு கட்டிடக் கலை பயில வந்த மாணவனான ஜெரார்ட் டா குன்ஹா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மெல்லிய பாணியில் சொல்வதாயின் தனக்கு கணவனாக வரப் போகின்றவரை அருந்ததி ராய் முதன் முதலாக அங்குதான் கண்டிருந்தார்.
இருவரின் திருமண வாழ்வும் நான்கு வருடங்கள் இனிமையான புன்னகைகளும் அன்பும் நிறைந்த தேசத்தில் சந்தோசமாக சென்று கொண்டிருக்கையில் தொழில் நிமித்தம் இருவரும் கோவாவுக்குப் புறப்பட வேண்டியிருந்தது. தாம் கற்ற கட்டிட நிர்மானக் கலை இருவருக்குமே ஜீவானோபாய நலனுக்குக் கைகூடியிருக்கவில்லை. ஆதலால் அவர்களுடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக கழிய வில்லை.
அருந்ததி ராயின் தாய் சமூக செயற்பாடுகளில் தன்னை ஆழமாக உட் செலுத்திக் கொண்டிருந்த ஒருவராவார். அவர் ஒரு பாடசாலையை ஸ்தாபித்திருந்தார். இவரின் சமூகத்தின் மீதிருந்த ஆர்வம் கூட அருந்ததி ராயையும் அதன் பால் ஈர்க்கும் சக்தியாக மாறி அவரையும் இதில் ஈடுபட ஒரு தூண்டு கோலாக அமைந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
பொழுதுகள் மெதுவாகக் கழிந்து கொண்டிருக்கையில் அருந்தி ராய் மெல்லிய புன்னகையுடன் எவ்வித ஆராவாரிப்புமின்றி வீதியில் தன் பாதையில் பயணித்துக் கொண்ருக்கிறார். சைக்கிளினை மெதுவாக ஓட்டிக் கொண்டிருக்கிறார். அந்த ஓட்டத்தை ஒருவர் நுணுக்கமாகக் கவனிக்கிறார். அவர் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணன் என்பதை அருந்ததி ராயினால் இலகுவாக அடையாளம் காணக் கூடியதாக இருந்தது.
இயக்குனர் பிரதீப் கிருஷ்ணன் அவருடைய ‘ஆயளளநல ளூயயடி’  என்ற  திரைப்படத்தில் சிறு பாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பொன்றை வழங்கினார். அருந்ததி ராயும் அதில் நடித்தார். ஒரு கட்டத்தில் பிரதீப் கிருஷ்ணனை மணம் முடித்தார். தன் வாழ்க்கைப் பயணம் செவ்வனே மகிழ்ச்சிப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்க மற்றுமொரு வாய்ப்பு அருந்ததி ராய்க்குக் கிடைத்தது. நினைவுச் சின்னங்களைப் புதுப்பிப்பதற்கான புலமைப் பரிசில் பெற்று எட்டு மாதக் கற்கை நெறிக்காக இத்தாலிக்குப் புறப்படுகிறார்.
கற்கை நெறியை முடித்துக் கொண்டு இத்லியிலிருந்து திரும்பிய அருந்ததி ராய் தன் கணவனுடன் இணைந்து பல்வேறு திட்டமிடல்களை மேற்கொள்ளலானார். தொலைக்காட்சி நாடகத்துக்கான 26 கிளைக் கதைகளை எழுதினார். திரைக்கதை வசனங்களும் எழுதினார்.
அருந்ததி ராய் சேகர் கபூருடைய சச்சரவுக்குள்ளான திரைப்படத்துக்கு திரை வசனத்தை அருந்ததி ராய் எழுதினார். இதனால் அவர் நீதி மன்ற வாசலை மிதிக்க வேண்டியிருந்தது. பின் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக் கொண்டவர் முற்று முழுதாக எழுத்தில் நாட்டம் கொள்ளத் தொடங்கினார். அதன் விதைப்புக்கள்தான் இன்று கடவுளின் சின்ன விஷயங்கள் எனும் பொக்கிஷமாக முளைத்துள்ளது.
அரசியல் ரீதியாக நடுத்தரமமான கருத்துக்களையும் தீவிரமான விமர்சனங்களையும் தன் எழுத்துக்களில் அருந்ததி ராய் தீவிரப்படுத்தினார். மட்டுமன்றி மேதா பக்டர் என்பவருடன் இணைந்து நர்மதா அணைக்கட்டு விவகாரத்தைத் தீவிரமாகக் கவனித்து வந்தார். ஒரு அணைக்காக ஐம்பது இலட்சம் மக்களை ஆடு, மாடு போல் விரட்டியடிப்பது எந்த விதத்தில் நியாயம் என இவரின்; குரல் ஓங்கியெழுந்த போதுதான் பலரது கவனம் நர்மதா அணைக்கட்டின் மீது திரும்பியது.
ஒரு கட்டத்தில் நர்மதா அணை எதிர்ப்பாளர்களே இவருடைய கருத்துக்கள் குறித்து வாதிப் பிரதிவாதங்களை முன் மொழிந்த போது, நான் சத்தமாகப் பேசினால் உறங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்து விடுவார்களோ எனச் சிலர் பயப்படுகிறார்கள். நான் அப்படித்தான் பேசுவேன். உறங்கிக் கொண்டிருக்கும் அத்தனை இந்தியர்களும் விழித்துக் கொள்ளட்டும் எனப் பகிரங்க அறிவிப்பை விடுத்து அத்தனை பேரினது வாயையும் அடைத்தார்.
இதனாலேயே நான் மேலே கூறியது போன்று இவர் இந்திய அரசு வழங்க அறிவித்த சாஹித்திய அகாதமி விருதை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தால்தான் சுதந்நிரமாக செயற்பட முடியும். தான் இப்பரிசைப் பெற்றிருந்தால் அரசின் கைப்பிள்ளையாக மாறும் நிலைக்கு ஆளாகலாம்; எனக் கூறினார்.
அண்ணா ஹஸாரேவின் இயக்கம், நரேந்திர மோடியின் அரசியல் நகர்வுகள், காஷ்மீர் பிரச்சினை என இவர் நோக்கும் பிரச்சிணைகள் சற்று வித்தியாசமானவை. நீதி, அநீதிகளுக்கிடையில் நாட்டின் தலை விதியை மாற்றியமைக்கக் கூடிய மருந்துப் பொருட்கள் அவை. நல்லவை, தீயவையை நிர்ணயிப்பணயிக்கும் காரணிகள் எனவும் வரையறை செய்யலாம்.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி முன்னிரவில் இந்தியாவின் தலை நகரான தில்லியில் நடந்த அகோரச் சம்பவம் இந்தியாவை மட்டுமல்ல. முழு உலகையும் கவலைக்குட்படுத்தியது. 23 வயதான மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் வன் பாலுறவுக்குட்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமணைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த இந்த மாணவியை மரணம் சந்தித்து விட்டது. இந்தவிடயம் யாவரும் அறிந்த ஒன்றே.
இந்நிலையில்; இங்கிலாந்தின் சேனல் நான்கு (ஊhயnநெட 4) தொலைக்காட்சிக்காக சேனல் நான்கு தொகுப்பாளர் ஜோன் ஸ்நோ என்பவர் அருந்ததி ராயுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டிருந்தார். வெறுமனே மூன்று நிமிடங்களே ஒளிபரப்பான அந்த உரையாடல் இந்திய ஊடகங்களில் பாரிய விவாதங்களைத் தூண்டி விட்டது. இது ஆரம்பத்தில் எதிர்க்கப்பட்டாலும் பின்னர் பலரால் ஏற்றுக் கொள்ளப்படத்தான் செய்தது.
அருந்ததி ராய் இங்கு தனிப்பட்ட ஒரு பெண்ணுக்காக மத்திரம் பேசாமல் முழு இந்திய தேசத்தின் நலனையும் கருத்திற் கொண்டே பேசியுள்ளார். பெண்ணிலை வாதத்தின் மிகச்சரியான சொற்களே அவரிலிருந்து வெளிப்பட்டுள்ளது என்பதை இது பற்றி விரிவாகப் பார்க்கையில் புரிந்து கொள்ள முடியும்.
செயலிலும், எழுத்திலும் தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண்டு செயற்படும் அருந்ததி ராய் நிகழ்காலத்தின் நிகழ்நிலையை எடுத்துக் காண்பிக்கிறார். ஒரு தேசத்தின் இருப்பிடத்தை, அடையாளத்தை நிலை நாட்டுகிறார். தனது செயலிலும், எழுத்திலும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி வரும் அருந்ததி ராய் எனும் பெண் இந்தியாவிற்குக் கிடைத்துள்ள அறிய வகையான ஆரோக்கிய மருந்தாகும்.
ihதயளnஅ@பஅயடை.உழஅ

Series Navigationஹியாம் நௌர்: துயரின் நதியில் நீந்துபவள்சில்வியா ப்ளாத்: சாவின் கலையைக் கற்றுக் கொண்டவள்