அவன் முகநூலில் இல்லை

Spread the love

sathyanandan

 

நிழற்படங்கள்

செய்தித் துளிகள்

முகநூலில்

சமூக​ வலைத்தளத்தில்

மின்னஞ்சலில்

எல்லாமே

ஒத்திகைகளாய்

 

அரங்கேறும்

நாடகத்தில்

எதிர் கதாபாத்திர​

வசனம் உடல் மொழி

யூகிக்கும் முயற்சிகளாய்

 

மின்ன்ணு

ஒத்திகைகள்

எப்போதும்

முழு ஒப்பனையுடன்

 

ஒப்பனையின்றி

ஒத்திகையின்றி

சாட்டையால் கத்தியால்

தன்னை

ரணமாக்கும்

கல்லூளிமங்கன்

சலங்கை சத்தம்

மேல் தளத்தில் இருக்கும்

என் அறை வரை

எட்டுவதில்லை

 

இம்மாநகரின் ஏதோ ஒரு

மூலையில்

அவன்

இருக்கக் கூடும்

 

நிச்சயம்

அவன்

முகநூலில் இல்லை

 

–சத்யானந்தன்

Series Navigationமிதிலாவிலாஸ்-16மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015