ஆடும் அழகே அழகு 

 


 

 

[எல்லாம் இன்ப மயம் மெட்டு ]

(அணு உடைப்பு ஆய்வக வாசலில் தில்லை நடராஜா சிலை , France Border)

ஆடும் அழகே அழகு 

சி. ஜெயபாரதன், கனடா 

 

ஆடும் அழகே அழகு – தில்லையில் நீ 

ஆடும் அழகே அழகு. 

 

அணு உடைப்பு ஆய்வக வாசலில்  

ஆடி வரவேற்கும் ஐரோப்பிய  அரங்கில் 

ஆடும் அழகே அழகு, அதனைப் 

பாடும் மரபைப் பழகு. 

 

ஆதி மூலன் நீஅகிலம் படைத்த நீ 

ஆடும் அழகே அழகு.  

 

ஓங்கார நாதத்தில் ஆங்கார மோடு 

தீங்கிழைத்த அசுரன் மேல் கால்வைத்து 

ஆடும் அழகே அழகுகம்பீர மாய் நீ 

ஆடும் அழகே அழகு. 

 

நெற்றிக் கண்ணன் ஒற்றைக் காலில் 

ஆடும் அழகே அழகு. 

வெற்றி மாலை சூடி முற்றும் அதிர்ந்திட நீ 

ஆடும் அழகே அழகு. 

  

ஒரு கையில் அக்கினி ஏந்தி  

மறு கையில் உடுக்க டிக்கும் கூத்தாடி நீ 

ஆடும் அழகே அழகு. அதைப்  

பாடும் சீடரை ஆசீர்வதி நீ. 

 

ஆதி முதல்வன் நீஅண்டக் குயவன் நீ ! 

ஓதி உணரும் உன்னதன் நீ ! உத்தமன் நீ ! 

நீதி நெறியுடன் நிறுத்துப் பகிர்பவன் நீ ! 

வேத ஞானி நீ ! மேதினி செழிக்க  நீ  

 

ஆடும் அழகே அழகுஅவனியில்  

நில்லாது, நிற்காது, ஆட்டம் ஆடு ! 

நித்திலன் நீ, சத்தியன் நீ, வித்தகன் நீ 

நீ நின்றால் பூமியே நின்று விடும் 

பூகோளம் அழிந்து விடும், தொடர்ந்து 

ஆடும் அழகே அழகு, ஆதி சக்தி நீ 

ஆடும் அழகே அழகு. 

 

ஆடும் அழகே அழகு. அதைப்  

பாடும் சீடரை ஆசீர்வதி நீ. 

கேட்கும் மக்களைக் காப்பாய் நீ 

கேளா மக்களை மீட்பாய் நீ 

 

ஆடும் அழகே அழகு, உனை இனி 

பாடும் இசையே தனி 

 

******************* 

Series Navigationக்ரோ எனும் கிழவர்