ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்!

 

 

கவிஞர் சாயாம்பூ 

நான்

காத்துக் கொண்டிருக்கிறேன்!

எதற்காக? ஏன்?

தெரியவில்லை!

ஆனாலும்

காத்துக் கொண்டிருக்கிறேன்!

வாழ்வின் இன்பங்கள் புழுதியாய் சூழ்ந்துள்ளன!

ஆனாலும் நான்

காத்துக் கொண்டிருக்கிறேன்!

யாருக்காக?

என்ன இல்லை வாங்கிக்கொள்ள!

ஆனாலும்

நான் ஏக்கப்படுகின்றேன்!

கொடுக்க எனக்கு நிறைய இருக்கிறது

ஆனாலும் நான்

வெறுங்கையாய் நிற்கின்றேன்!

காலம் என்னும் போர்வை மீது

சுற்றிக் கொண்டு தவியாய் தவிக்கின்றேன்!

ஏனோ தெரியவில்லை!?

ஆனாலும் நான்

காத்துக் கொண்டிருக்கிறேன்!!

 

                      -கவிஞர் சாயாம்பூ                     

 

Series Navigationஅவஸ்தை‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்