ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக்  கலைஞரான ஷம்ஸியா ஹசானி

 

 

 ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கைப்பற்றுவதால் உண்மையான அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் கடந்த கால ஆட்சியின் போது பெண்கள் எதிர்கொண்ட கொடூரத்தை கருத்தில் கொண்டு, பெண்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பது குறிப்பாக கவலைக்குரியது. ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக்  கலைஞரான ஷம்ஸியா ஹசானி, தனது உணர்ச்சிகளை கலையாக மாற்றி, நெஞ்சை உலுக்கும் தொடர்ச்சியான படங்களை தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஹசானி 1998 இல் ஈரானில் அகதி முகாமில்  பிறந்தார். 2005 ஆம் ஆண்டில் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினார், ஒரு மாறுதலை  ஏற்படுத்த உறுதி பூண்டார்.  மற்றும் போரின் வடுக்களை சமன்படுத்த  கலையைப் பயன்படுத்தலாம்  என்று நம்பினார். காபூல் பல்கலைக்கழகத்தில் தனது காட்சி கலை(visual arts) பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் நுண்கலை விரிவுரையாளராகவும், சிற்பக்கலை பேராசிரியராகவும் ஆசிரியர். குழுவில் இடம் பெற்றார்.  ஒரு தெருக் கலைஞராக, அவர் தனது கலைப்பணியை  -முக்கியமாக பெண்களை மையமாகக் கொண்ட -பொது இடத்திற்கு கொண்டு வரத் துணிந்தார். அவ்வாறு செய்வதன் மூலம், ஆப்கானியப் பெண்களின் புதிய தலைமுறைக்குச் சிறந்த உதாரணமாக அவர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டார்.
 
இப்போது, ​​பெண்கள் மீண்டும் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதால், ஹசானியின் சமீபத்திய ஓவியங்களிலிருந்து வண்ணம் வெளியேறிவிட்டது. மரணம் முதல் இருள் மற்றும் கனவு போன்ற தலைப்புகளுடன், பெண்  எப்படி உணர்கிறாள் என்பதை சித்தரிக்கிறது. அவரது படைப்புகளில்  குரூர தலிபான்கள் இருளில் மூழ்கி, அச்சுறுத்தும் உருவங்களாகக்  காட்சி அளிக்கிறார்கள். அவரது ஓவியங்களில் உள்ள பெண்கள் நீல நிறத்தில், தலைக்கவசம் அல்லது பர்தா அணிந்துள்ளனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationதப்பிப்பிழைத்தவன்படித்தோம் சொல்கின்றோம் :  மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின்   எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்