ஆம் இல்லையாம்

Spread the love

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அன்பு என்பது
உணர்வாகவும்
சொல்லாகவும்
உண்மையாகவும்
பொய்யாகவும்
விரிந்தும்
சுருங்கியும்
விலகியும்
நெருங்கியும்
கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது.
களைத்துப்போகச் செய்தாலும்
புண்ணாக்கினாலும்
ஒன்று மீதமில்லாமல் எல்லாத் தூண்களின் பின்னாலும்
ஓடியோடித் தேடியபடியே
நாம்…….

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4கவிதை என்பது யாதெனின்