இது பொறுப்பதில்லை

கலையின், பெண் கல்வியின்,
மத நல்லிணக்கத்தின் எதிரிகள்
நூறு மலர்களை வேட்டையாடினர்

மதங்கள் மனிதம் வாழ
கொலை வெறிக்கு
அடிப்படை ஆக அல்ல

மத குருமார்
மதத் தலைவர்
இன்னும் பொறுத்தால்
ஓர் நாள்
அவரும் வேட்டையாடப் படுவர்

புத்தரின் புராதன
சிலைகள் சிதிலமான போதே
மனித குலமே
தாக்கப் படும் சமிக்ஞை
வந்து விட்டது

கொலையே இல்லா உலகம்
காணும் கனவே
பண்பாடு

கொலைகாரர்களைக் கண்டிக்க
உலகே ஒன்று படாவிட்டால்
உலகே கொலைக்களம்
ஆகிவிடும்

நூற்றுக்கும் மேல்
பலியான பிஞ்சுகள்
தியாகம் தொடங்க
வேண்டும் மானுடத்தின்
புதிய அத்தியாயம்

Series Navigationகிளி ஜோசியம்பெஷாவர்