இனிவரும் வசந்தத்தின் பெயர்

 

வெளிறிய கோடை இலைகளே.. 

வறண்டு போன

நடை பாதைகளே..

நீருடை பூணும்

கானல்களே..

ரத்தமற்று சுருங்கிப் போன

நதி தமநிகளே..

கருகி விழுந்த

பூவிதழ்களே..

எனதிந்த

வெற்றுக் காகிதங்களிடம்

இனிவரும்

வசந்தத்தின் பெயரை மட்டும்

சொல்லுங்கள்..

*

***

Series Navigationஅரூப நர்த்தனங்கள்ஒரு பூவும் சில பூக்களும்