இன்னும் புத்தர்சிலையாய்…

இதயத்தில் தாங்கினேன்
தோழியே
உனை..
இன்னும் தான்
பாடம் படிக்கிறேன்
நான்…

உன் மனம்
புண்பட்டதோ –
கண்ணீரைச் சுமக்கின்றேன்
தினமுந் தான்
நான்…!

உனக்குள்ளே வந்துவிட
கருவாகச்
சுருங்கினேன்…

என் சுவாசத்தில்
கருகினேன் –
காற்றிலே சாம்பலாய்
உனைத்தேடி
பறக்கிறேன்…

கற்பாறை போலவா
என் மனம்..?,
நீரலையாய் வந்து
அறைந்தாயே…

உனக்குள் நான்
உறங்குகிறேன்
இன்னும்
புத்தர் சிலையாய்…
உன் சுவாசமாவது
தாலாட்டும்…!!

ஜே.ஜுனைட்
Jjunaid

Series Navigationகுரூர மனச் சிந்தனையாளர்கள்