This entry is part 37 of 51 in the series 3 ஜூலை 2011

திரிபு வார்த்தைகளும்
தத்துவார்த்த பிழைகளும்
தின்மச் சொற்களும்
தந்த ரணங்களை சுமந்து
இடர் சூழ்ந்த இவ்வுலகில்
பொருள் தேடி அலைகிறேன்….

துயரம் சொல்லொணாத்
தவிப்புடன் உடல் நிறைக்க
இறுகிப்போன சக்கையாய் மனம்….

நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்
தன்னந்தனியாய் தவிக்கும்
அழுகையின் நிறம்
மீளாத்துயருடன்
பின் தொடரும் நிழலாய்
நினைவுதிர்த்து போகின்றது……

Series Navigationமனபிறழ்வுதடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.