Posted in

இயற்கையை நேசி

This entry is part 17 of 22 in the series 1 ஏப்ரல் 2018

எஸ்.அற்புதராஜ்

(கணினியை மூடிவிடு.
ஏ .சி .யை நிறுத்திவிடு .
அறையை விட்டு வெளியே வா!)
வானத்தை வந்து பார்.
வெண்மேகங்கள் ஊர்வதைப் பார்.
நீலமேகம் ஒளிந்து விளையாடுவதைப் பார்.
செங்கதிரோன் கீழ்வானில் மறைவதைப் பார்.
பச்சைவயல் ஓரங்களில்
தென்னை மரங்கள் சிலுப்புவதைப் பார்.
அசைவில் காற்று மெல்லத் தவழ்ந்து வரும்.
மெல்லவரும் காற்றை
சுவாசம் கொள்.
இயற்கையை நுகர்ந்து பார்.
இன்றைய வேலை வெற்றியில் ஜ்வலிக்கும்.

Series Navigationபுத்தகங்கள்பொன்மான் மாரீசன்

One thought on “இயற்கையை நேசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *