இயல்பான முரண்

Spread the love

சத்யானந்தன்

நகரும் புள்ளிகளான
தடங்களில்
வெவ்வேறு திசையில்
நீ நான்

பல முனைகளைக்
கடந்த போதும்
எதிலும்
நாம்
சந்திக்கவே இல்லை

இருந்தும்
என் எழுத்துக்கள்
சொற்கள் இடைப்பட்டு
புள்ளி ஒன்று
உன்னாலே
முளைத்து விடுகிறது

இதனால்
ஒவ்வொரு
வாசிப்பிலும் என்
முரண்பாடுகள் சில
புதிதாய் சில
வேறு வடிவாய்

தடம் மாறுதல்
இயல்பான முரண்

Series Navigationபாடம் (ஒரு நிமிடக்கதை)மிதிலாவிலாஸ்-13