இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு  

Spread the love

 


மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு பேருவலை, மருதானையிலுள்ள அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் அப்துல் அஃலாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், இரத்தினக்கல் வியாபாரிகளான அல்ஹாஜ் எம்.ரீ.எம். ஹாரிஸ் மற்றும் அல்ஹாஜ் அத்னான் ஆகியோர்கள் நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொள்வார்கள்.


பிரதம அதிதியாக முன்னாள் தொலைத் தொடர்பாளர் அமைச்சர் அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களும் கௌரவ அதிதிகளாக மேல் நீதிமன்ற நீதியரசர் அல்ஹாஜ் அஹ்ஸன் மரிக்கார் மற்றும் அஷ்ஷெய்க் மௌலவி ஸகி அஹ்மட்; ஆகியோரும் கலந்துகொள்வார்கள். அத்துடன் விசேட அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அஸ்லம், பேருவலை நகர பிதா அல்ஹாஜ் மஸாஹிம் முஹம்மட், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் இஃதிகார் ஜெமீல், சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.ஏ.எம். ஹனபி, அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி மஸ்னவியா ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.


நிகழ்வின் சிறப்புப் பேச்சாளர்களாக தொழிலதிபர் அல்ஹாஜ் ரம்ஸி அமானுல்லாஹ் மற்றும் கவிஞர் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளார். சிந்திக்க மறந்த உள்ளங்கள் சிறுகதை நூலுக்கான ஆய்வுரையை கவிஞர் திக்குவல்லை ஸும்ரியும், வாப்பாவுக்கு ஒரு சால்வை நூலுக்கான ஆய்வுரையை திக்குவல்லை கமாலும் நிகழ்த்துவார்கள். அதனைத் தொடர்ந்து பன்னூலாசிரியர் கவிதாயினி வெலிகம ரிம்ஸா முஹம்மத் கருத்துரை வழங்கவுள்ளார். கலைவாதி கலீல், கவிஞர் அலி அக்பர் ஆகியோர்கள் கவிதைப் பொழிவுகளை நிகழ்த்துவார்கள். நூலாசிரியர்களின் ஏற்புரை மற்றும் நன்றியுரைகளும் தொடர்ந்து இடம்பெறும்.


அத்துடன் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை புகழ் கலைஞர்களான மஹ்தி ஹஸன் இப்றாஹிம், ஞெய்ரஹீம் சஹீத் குழுவினர் வழங்கும் சஞ்சாரம் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்;ளது. தொடர்ந்து மேலும் பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளை திக்குவல்லை ஸும்ரி அவர்கள் சிறப்புறத் தொகுத்து வழங்குவார். மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர்.Thanking You.
 
இப்படிக்கு,
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

077 5009 222


Series Navigationஉறவே! கலங்காதிரு…மழைப்பொழியா மேகங்கள்