இலை மறை காய் மறை

அழகர்சாமி சக்திவேல்

 

முகமலைப் பயிர்வனம் வனமோரம் வாய்க்குளம்

குளக்கரையில் இன்பமாய்க் கூத்தாடியதென் இதழ்க்கால்கள்

சுகமுடன் குளமிறங்கி சுவைநீர் குடித்தெழுந்தேன்

மாமன் முனகினான் “உன்மீசை குத்துதடா”

 

நெஞ்சுமலைப் பயிர்வனம் வனமோரமிரு நீராம்பல்

நீராம்பல் கூம்புபற்றி நீர்குனிந்து பருகுமெனைக்

கெஞ்சியது நீராம்பல் குலுங்கியது நெஞ்சுமலை

மாமன் முனகினான் “உன்மீசை குத்துதடா”

 

முதுகுமலைப் பயிர்வனம் வனத்தின்கீழ் பஞ்சுமெத்தை

பஞ்சுமெத்தை தனைத்தாங்கும் இருமுரட்டுத் தேக்குமரம்

குதூகலமாய் மெத்தையிலென் முகம்பதித்து நான்தூங்க

மாமன் முனகினான் “உன்மீசை குத்துதடா”

 

இடைமலைப் பயிர்வனம் வனம்நடுவில் ஊர்க்குருவி

ஊர்க்குருவி குடியிருக்க உயரமாய் இருகோட்டை

துடிப்புடன்நான் கோட்டையேறி குருவிதனைத் தொட்டிட்டேன்

மாமன் முனகினான் “இனி நான் பித்தனடா”

 

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

 

Series Navigationபீப் பாடலும் பெண்ணியமும்புதியதோர் பூதக்கோள் புறக்கோளாய் நீண்ட நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சான்றுகள் அறிவிப்பு