உன்னைப் பற்றி

Spread the love

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

நான் பயணிக்கும் அதே ரயிலில்தான்

ஒருவாரமாய் பயணிக்கிறாய்

உன்னைப்பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது

ஏறும் ரயில் நிலையத்துக்கு

அருகில்தான் உன் வீடு

உன்னைப்பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது

இறங்கும் நிலையத்துக்கு

மிக அருகில் பணிபுரிகிறாய்

உ.ப.வே.எ. தெரியாது

ரோஜாப் பூக்களை விரும்பிச் சூடுகிறாய்

உ.ப.வே.எ. தெரியாது

சந்திரிகா சோப்பு உபயோகிக்கிறாய்

உ.ப.வே.எ. தெரியாது

நான் பணிபுரியும் அதே நிறுவனத்தில்தான்

உன் தம்பியும் வேலைசெய்கிறான்

உ.ப.வே.எ. தெரியாது

அவனுக்கு அடுத்த மாதம் பிறந்தநாள் வருகிறது

உன்னைப்பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationபேராசிரியர் இரா ஆண்டி நினைவு சொற்பொழிவுமயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை