உன்னை நினைவூட்டல்

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

உன்னை நினைவூட்டும் எதுவும்

இனி இல்லை என்றாய்

செல்லும் வழியிலெல்லாம்

இன்னமும் செடிகள் பூக்கத்தான் செய்கின்றன!

 

உன்னை நினைவூட்ட

இனி ஒன்றும் இல்லை என்றாய்.

செல்லும் வழியெல்லாம்

வண்ணத்துப்பூச்சிகள் இன்னமும்

பறந்தவண்ணமே இருக்கின்றன!

 

உன்னை நினைவூட்ட

ஒன்றும் மிச்சமில்லை என்றாய்.

செல்லும் வழியெங்கும்

இன்றும் குழந்தைகள்

புன்னகைக்கத்தான் செய்கிறார்கள்!

 

Series Navigationஅடியில் உறங்கும் அறச்சீற்றம் [சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவலை முன்வைத்து]தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..