உயர்த்தி

சு. இராமகோபால்

 

கதவு திறந்தது
மஞ்சள் கலிடோனியாவின் கண்ணில் பிறந்த
கரும்புத் தொட்டிகளைப் பரிசோதித்து வந்த
நானும் உதவியாளனும்
உள்ளே நுழைந்தோம்
மேலே செல்ல பொத்தானை அமுக்கினான்
கதவு மூடுமுன் எங்களுடன்
வேகமாக சேர்ந்தாள்
இளம் தீவுப்பெண்ணொருத்தி
முழங்கால்களைத் தாண்டும்
அடர்ந்த கருங்கூந்தல்
குடியேறிய மூன்று நான்கு இனங்களின்
சேர்க்கையில் பரிணாமித்த எழில்
ஜிம் அவளைக் கிண்டல் செய்தான்
உனக்கென்ன
நீ வரலாம் போகலாம்
தளம் வந்ததும்
முதலில் வெளியேறிய அவள்
நகைத்தபடி சொன்னாள்
நான் இந்த விஞ்ஞானிகளின்
தபால்காரிதானே

Series Navigationசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்டிரைவர் மகன்