‘உயிரே” ………………

Spread the love

ஜெனித்தா மோகன் (இலங்கை)

 

 

உயிரே உயிரே ஒருமுறை

உறவென்று அழைப்பாயா?

உயிர் பிரியும் வரை அது போதும் தருவாயா?

 

இரவுகள் நீள்கின்றது உன்னாலே

இலக்கியம் படைக்கின்றேன் தன்னாலே

கவிதைகள் வருகிறது உன்னாலே

கவிஞனும் ஆகிறேன் தன்னாலே

 

சொந்தமும் வருகிறது உன்னாலே

சொர்க்கமாய் மாறுகிறது தன்னாலே

இன்பங்கள் கோடி வருகிறது

இயற்கையும் அழகாகிறது

தன்னாலே

 

உன்னோடு பேசிட ஒரு நிமிடம் தருவாயா

உறங்காமல் இருந்திட பல

பல கதைகள் சொல்வாயா?

 

தோளோடு தோள் சாய்ப்பாயா

தொடர்கதையாக விழி மேய்வாயா?

செல்லமாய் என்னை திட்டுவாயா?

உன்னாடை கொண்டே முகம்

மறைக்க அனுமதிப்பாயா?

 

ஓரக்கண் பார்வை

ஓய்வின்றி தருவாயா

உலகம் மறந்திட உத்தரவு தருவாயா?

 

கடைசி வரை உயிரோடிருக்க

உன் உண்மை அன்பு

அது போதும்

பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கின்றேன் உன்னால்

சிறகொடிந்த பறவையாக்கி விடாதே என்னை….

Series Navigationபடித்தோம் சொல்கின்றோம்:சொல்வனம் 245 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை