உறவுகள்

_கோபால்தாசன்

எனக்கான வீடு இது.

என் சிந்தனையின் பட்டறை
என்றுகூடச் சொல்லலாம்.

தோற்றம்
பழைய கட்ட்டிடமாக இருந்தாலும்
உள்ளிருக்கும் ஒவ்வொரு அறையும்
என்னுள்ளிருக்கும் உறுப்புகளாய்…

மிளகாய் விதை இட்டு
முளைத்த செடிகளும் உண்டு.

திருட்டுத்தனமாய் பிடுங்கி வந்து
நட்ட பூச்செடியும் உண்டு.

அப்பா அம்மா இருந்தும்
இல்லாத அந்தப் பருவம்
அவிழ்த்து விட்ட கன்று போன்றது.

பக்கத்து வீட்டிற்கும்
என் வீட்டிற்கும்
மதிற்சுவர் பொது என்பதால் அடிக்கடி
அம்மாவும் பக்கத்துவீட்டு
அக்காவும்
தலையை நீட்டிப் பேசிக்கொண்டிருக்கும்
பேச்சில் அதிகம்
குழம்பு, கூட்டு வாசனையே
அடிக்கும்.

ஒரு நாள்

இடியோடு பெய்த அடை
மழையில்
வீட்டின் பின்புறச் சுவர்
இடிந்துவிழுந்ததில்

ப்ரியமாய் வளர்த்த
நாய்க்குட்டியும் பூச்செடிகளுக்கு
இறந்து போகவே

அவ்வீடு ஏனோ
பிடிக்காமலேயே
போய்விட்டது.

Series Navigationநாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.இப்போதைக்கு இது – 3 மரணதண்டனை