ஊதா நிற யானை

சுத்தமாய் வெள்ளைத்தாள்
சிதறிய கிரெயோன் கலர்கள்
இரண்டு கோடுகள்
ஒரு கோணல் வட்டம்
நம்பிக்கையோடு
யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று

குழந்தைக்கோ கர்வம்
ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று.

யானைக்கு ஊதாநிறமா?
அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை
இரண்டு கால் யானை எங்குள்ளது
அடித்துத் திருத்தினார்

குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக
அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க
நடந்து போனார் ஆசிரியை.

சமீலா யூசுப் அலி
மாவனல்லை
இலங்கை

Series Navigationவாழ்தலை மறந்த கதைஇருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்