என் சடலம்

Spread the love

 

 சேயோன் யாழ்வேந்தன்

நிச்சயமாகத் தெரியும்

அது

என் சடலம் தான்

கண்ணாடியில்

தினமும்

பார்ப்பதுதானே

அடையாளம்

தெரியாமல்

போய்விடுமா என்ன?

இப்போதெல்லாம்

அடிக்கடி

தென்படுகிறது

என் சடலம்

இல்லை, அது எப்போதும்

இருக்கிறது

நான்தான்

இதுவரை

கண்டுகொள்ளவில்லையோ

என் சடலத்தை.

நம் சடலத்தை

நாம் கண்டு

அழாமல்

நாயா அழும்?

வாழும் போது

என் சடலம்

எனக்கே தெரியாமல் போனால்

செத்த பின்பு

என் சடலம்

தன் சடலமென்று

தெரியாமல் போகாதா

இன்னொருவனுக்கு?

 

-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

 

Series Navigationபேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்சீஅன் நகரம் -4 டவோ மதகுரு லவோட்சு