பாவலர் கருமலைத்தமிழாழன்
மரம்போல    உயர்வாக    வளர்வ    தாலே
	மனிதனுக்குப்    பெருமைவந்து    சேர்ந்தி    டாது
மரம்போலப்   பிறருக்குப்   பயனை  நல்கும்
	மனமிருந்தால்   தான்அவனை    மனித  னென்பர் !
அரம்போலக்   கூரறிவு    இருப்ப    தாலே
	ஆன்றோனாய்ப்   புகழ்வந்து   குவிந்தி   டாது
கரத்தாலே    அணைத்துபிறர்    துயரைப்    போக்கும்
	கருணையிருந்   தால்தான்இப்    புவியும்    போற்றும் !
என்னஇந்த    சாதியிலே    பிறந்தோ    மென்றே
	எண்ணிமனம்    ஏளனத்தில்   குறுகி    டாமல்
என்னயிங்கே   சாதிக்கப்    பிறந்தோ    மென்றே
	எண்ணிமனம்     செயல்செய்து   நிமிர  வேண்டும் !
சின்னதொரு    தோல்விக்கும்    மனம்த   ளர்ந்து
	சிறகொடிந்த    பறவையென    விழுந்தி    டாமல்
முன்நிற்கும்     தடைதன்னை    மோதி   மோதி
	முன்னேறும்    எறும்பைப்போல்    செல்ல    வேண்டும் !
இலவசமாய்க்    கொடுக்கின்ற    பொருளைத்    தம்மின்
	இருகரத்தால்    விருப்பமுடன்   வாங்கு    வோனோ
நிலம்தன்னில்    தவறுசெய்யும்    கயவர்   தம்மை
	நின்றெதிர்க்கும்    உரிமையினை    இழந்து   போவான் !
புலம்பாமல்   துன்பினிலும்    துணிவு    கொண்டு
	புகுந்தஏழ்மை    நிலையினிலும்    நேர்மை    யோடு
புலம்தன்னில்    பொறுமையுடன்    உழைப்ப    வன்தான்
	புரிந்திடுவான்    சாதனைகள்    வெற்றி   காண்பான் !
- இரண்டு இறுதிச் சடங்குகள்
 - இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்
 - தொடுவானம் 79. தரங்கம்பாடி – பாடும் அலைகள்.
 - மிதிலாவிலாஸ்-28
 - காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 2
 - கற்பு நிலை
 - விலங்குகள் பற்றிய நினைவுகளோடு குழந்தை மனம் கொண்டவர்களும் பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு
 - அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்
 - வாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்
 - மாஞ்சா
 - மனக்கணக்கு
 - இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி  டாக்டர் அப்துல் கலாம்
 - திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும்
 - அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை = அமரர் அப்துல் கலாம் அவர்கள்
 - எறும்பைப்போல் செல்ல வேண்டும்
 - எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்
 - முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை
 - கலாம் நினைவஞ்சலி
 - திரை விமர்சனம் – சகலகலாவல்லவன்
 - அமாவாசை
 - ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு
 - புரட்சிக்கவி – ஒரு பார்வை
 - முதுமையின் காதல்
 - கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015
 - முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! – முத்துநிலவனின் கட்டுரை தொகுப்பு