எழுபதில் என் வாழ்க்கை

Spread the love

 

 

ஆட்டுக்கல் இட்டலி

அம்மிச் சட்டினி

கறந்தபால் நுரையொடு

காலை மாலை காப்பி

கூட்டாஞ்சோறு

குளத்துக் கெளுத்தி

மூங்கில் கட்டில்

முற்றத்து நிலா

கோழி மேயும்

கொல்லையில் தாயம்

முகம் பார்த்துப் பேச

மூணாங்கிளாஸ் மூர்த்தி

 

பல் தேய்க்க

காட்டு வேம்பு

தமுக்கடிக்க

தட்டான் குளம்

மும்மிய வேட்டியை

குடையாக விரித்து

நடக்கும் பாதையில்

வரப்பு நண்டு

 

இருப்பதைத்

தொலைத்து விட்டு

இத்தனையோடும் என்

எழுபதின் வாழ்க்கை

வேண்டும்

 

மறுக்கப்படும்

இவைகளென்றால்

இன்றே மரணம்

வேண்டும்

அமீதாம்மாள்

 

Series Navigationஇனப்பெருக்கம்ரகசியங்கள்