ஏதோ ஒன்று (கடவுள்? நேரம்? வினை)

Spread the love

ப.பார்த்தசாரதி


படுபயங்கரமான
சாலை விபத்தொன்றில்
காலும் கையும்
துண்டாய் நசுங்கி
ரத்த வெள்ளத்தில்
பாதி மயங்கிய நிலையில்
நசுங்கிய உடல் பிரிந்த
கைகளை வேறொருவன்
சாக்குப் பையில் போட
அனைத்திலும் அவன் பார்வை பட
காலன் வரும் ஒலியாய்
ஆம்புலென்ஸ் ஒலியெழுப்ப
காலத்தாமதமில்லா சிகிச்சையில்
உயிர் பிழைத்த
ஒருவனின் வாழ்க்கை பாதையை
ஏதோ ஒன்று விளிம்பிலிருந்து
நெடுந்தூரமாய் நீட்டிக்கிறது
தள்ளாடியபடி பயணிக்க.

Series Navigationகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 1) எழில் இனப் பெருக்கம்