ஏன்?

ஊனத்தின் நிழல் படிந்த

மங்கலான இடத்தில்

எழுதப்பட்டுள்ளது,

எனக்கான கேள்விகள்

ஆனால்?

விடைஎழுத யார்யாரோ!

ஒளிபுக முடியாத

ஒரு இருள் பேழைக்குள்

அடைக்கப்பட்டுள்ளுது

எனது பகல்கள்!

வியர்க்காத

ஒரு மனிதனின்ஊனில்

மாட்டிக்கொண்டுள்ளது

என்னது தாகத்தின் தண்ணீர்!

ஏனோ?

சலித்து போகாத

எனது விடைத்தாள்களில் மட்டும்

எப்போதும்

பிழைதிருத்தம்!

Series Navigationசென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்கிறுக்கல்கள்