ஏழாவது அறிவு

Spread the love

மஞ்சுளா

மதுரை 

ஒரு பூனையின் வருகையாக நிகழ்ந்தது அது
கால ரேகைகளை அடர்த்திப் பரத்தியிருக்கும் பூமியின் பருவச் செழிப்புக்களில் விளையும்இன்பப் பரவலில் உயிர்த்தெழுகின்றன என் கனவுகள் 
ஒரு பறவையின் உயிரின்பம் அதன் சிறகுகளில் உள்ளதாக  அறிந்தாயும் அறிவியலின் எல்லா எல்லைக் கோடுகளையும் தாண்டி வந்து விட்ட  அது அரூபத்தில் என்னை கடத்திச் செல்கிறது புல் பூண்டு மலைகள் ஆறுகள் அருவிகள் என என் இருப்பை மாற்றிக் கொண்டே வந்தது 
மானாக நிலத்தில் ஓடியும் மீனாக நீரில் நீந்தியும் திளைத்திருந்த  அனுபவங்கள் 
என்னை மனித  அறிவிலிருந்து மீட்டெடுத்தன  
ஆறாம் அறிவு என்னுள் அகதியாய் திணறிக் கொண்டிருந்தது 
அகதியை உற்று நோக்கிய கடவுள் இறுதி யோசிப்பில் 
ஏழாவது அறிவை பூனையிடமும் எலியிடமும் பிரித்துக் கொடுத்தார் 
பின் அவைகள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டிருந்தன கடவுள் சாட்சியாக                             –

Series Navigationகோவேறு கழுதைகள் நாவல் சிறப்புப் பதிப்பு முன்வெளியீட்டுத் திட்டம்ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது