ஐஸ்லாந்து

 

மனோஜ்

இந்த  அகண்ட, பரந்து விரிந்த பிரபஞ்சத்திலே நீங்களும் நானும் எவ்வளவு ஒரு கடுகினும் சின்ன குட்டியோ குட்டி புள்ளி என்கிறது தெரிஞ்சுக்குணம்னா நிலாவுக்கு வாங்கன்னு ஒரு விண்வெளி வீரர் பேச கேட்டதுண்டுபேருண்மைஆனா நாம நிலவுக்கு எல்லாம் அவ்வளவு எளிதா வண்டி ஏறி போற நேரம் இன்னும் வரலே என்கிறதால, அப்படி உங்களுக்கு ஒரு அனுபவம் வாய்க்கணும்னா போய் வாங்க ஐஸ்லாந்து (Iceland). 

எவ்வளவு பெரிய பிஸ்துனாலும், உங்க சர்வமும் சுருங்கி, நாம அவ்வளவுதானான்னு தலைய பூமிக்குள்ள தள்ளப்பட்ட வாமனன் effect  உங்களுக்கு உண்டு சர்வ நிச்சயமாய்.   கடல், மலை, மேகம், அப்புறம் எந்த பக்கம் திரும்பினாலும் கண்ணுக்கு எட்டிய தூரம்  வரை, எந்த தடங்கலும் இல்லாம திறந்த வெளி நிலம், நிலம், நிலம்சாம்பலின் பல வண்ணத்து நிறபேதம்ல, அங்கங்க கொஞ்சம் பாசி பிடிச்ச பச்சை, கறுப்புன்னு நிலம் (எரிமலை விட்டு செல்லும் குழம்பு பல வருடங்களாய் குளிர்ந்து இப்போ மணலானதால்). 

அங்கொன்னும் இங்கொன்னுமா புல் மேயுற குதிரைகல், பளிச்சுனு ஒரு பத்து நிமிஷத்துக்கு படு வெயில், அடுத்த பத்து நிமிஷம் மேக மூட்டம்அப்புறம் தூறல், அப்புறம் அப்படியே பத்து நிமிஷத்துக்கு சரியான மழைன்னு மாறி மாறி துவைச்சு எடுக்குற  காலநிலை.    போற வழியில பல கிலோமீட்டர் நீளத்துக்கு பனிப்பாறை  “ உலகளாவிய காலநிலை மாற்றதால் தண்ணியா கறைஞ்சு ஓடுற நதி சார் இது, இந்த பனிபாறையே நகர்ந்து வந்துக்கிட்டுருக்கு வேற!”,   இரண்டு மலைகளுக்கு நடுவில நடக்கரெண்டு பக்கமும் மலை இல்லை சார்அங்க மேல தான் நில சம நிலை. பல வருஷங்களுக்கு முன் நடந்த நிலநடுக்கம் காரணமா பிளந்து கிழிங்சி தொங்குற பகுதில தான் நாம்  நடந்து கிட்டிருக்கோம். இந்த பூமியில் உள்ள மிக பெரிய நில நகர்வு ஸ்தலங்கலில் (seismic tectonic plates)  இது ஒண்ணு “,   வரிசை கட்டி பேரிரைச்சலோட விழுகிற மிகப்பெரும்  நீர்வீழ்ச்சிகளபொங்கி பல மீட்டர் உயரத்திற்கு பலத்த சத்தத்தோடு வெளியேறுகிற நீராவி நீரூற்றுகள். “இங்க உங்க பாத்ரூம்கிச்சன்ல எல்லாம் வர்ற வெந்நீர் இயற்கையா பூமிக்குள்ள இருந்த வர்றதுனு நம்மள அலற விடுறாங்க.

பிரதமர் தானேஇது தான் சார் அவரு ஆபீஸ்பாக்கணும்னா  உள்ள போலாம்போலாமா?”,    “நாளைக்கி பூகம்பம் வந்தா போக போறோம்.   கடவுளாவது ஒண்ணாவதுஎங்க நாடே நாத்திக நாடுனு ஓவர் கணக்கு எல்லாம் இல்லாமல் வீசப்படும் பந்து கணக்காக வரிசையாக வந்து கொண்டே இருக்கிறது ஆச்சரிய தகவல்கள்.       

மொத்த ஜனத்தொகையில் 90 மேல விழுக்காடு தலைநகரான ரெய்ஜாவிக்கில் வசிக்கிறதுஇயற்கை கொடுக்காத நிறங்களை கட்டிடங்களிலும் உடையிலும் காட்டுகிறார்கள். வீடுகள் அற்ப சொற்ப வசதிகளோடே.

நீங்க இயற்கை (landscape) புகைப்படக்காரர் எனில், கிளம்பி போய் டென்ட் போடுங்கள்.  நிமிஷத்திற்கு நிமிஷம் ஆச்சரியங்கள் நிகழ்த்தி காட்டி கொண்டே இருக்கும் ஐஸ்லாந்து.  

பிரபலமானது வடக்கத்திய வெளிச்சம் (Northern Lights).  எனக்கு அந்த அருள் வாய்க்கவில்லை.  ஒரு இரவு கண் விழித்து, தேவுகாத்து காசு போச்சே  என்று வந்தது தான் சொச்சம்.  இதை வைத்து கல்லா கட்டுகிறார்கள்.  “திரும்பி வாங்க சார். ஆறு மாசம் வரைக்கும் இந்த டிக்கெட் செல்லும்”.   “அட போங்கய்யா ! இங்க இப்போ வந்ததே இன்னுமும் நம்ப முடியல…. இதுல வேற !!”. 

ஓண்ணு நிச்சயம் – எதுவும் நிச்சயமில்லை என்று.  அதனால நம்புகிறேன்  -இன்னொரு முறை உண்டு என்று.  எந்த கேள்விக்கும் என் தம்பி மகன் சொல்றது போல “யாருக்கு தெரியும்” !!

Series Navigationஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன்குருட்ஷேத்திரம் 12 (கர்ணனின் முடிவுக்கு குந்தியே காரணம்)