ஒட்டுண்ணிகள்

 

 

உன் உண்மை

எது உண்மை

என்னும் கேள்வி

இரண்டும் பலிபீடம்

ஏற

என் உண்மை

நிறுவப் படும்

 

அலைதல் திரிதலே

தேடல்

பிடிபட்டதே புரிதல்

என்னும்

விளக்கங்கள்

இடம்பிடிக்கும்

அகராதிகளில்

 

என் உண்மையின்

அரசியலில்

தனிமையின்

உயிர்ப்பு

தனித்துவத்தின்

ஆற்றல்

நீர்த்துப் போகும்

 

கரவொலிகள்

ஒட்டுண்ணிகளாய்

Series Navigationசீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரிதினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !