“ஒரு” பிரம்மாண்டம்

இல.பிரகாசம்

“ஓர்” என்பவற்றிலிருந்து எப்போதும்
“ஒரு” தனித்துத் தான் ஒலிக்கிறது
மிகச் சுலபமாக தனித்தறியவும்
பயன்படுத்துவதிலும்
எண்ணிக்கையில் வேறுபடுத்திக் காட்டுவதில்
இவைகள்
எத்துணைத் துள்ளியத்துடன்
செயல்படுகின்றன.

“ஒரு மனிதன்
ஓர் இனம்” அளவுகோளில்லை
எனினும் நான்
ஒரு என்ற வார்த்தையில்
பிரம்மாண்டத்தை உணர்கிறேன்.

Series Navigationகவிதைப் பிரவேசம் !சிறந்த தமிழ் திரைப்படங்கள் 150