கடல் நீர் எழுதிய கவிதை

-ஜே.பிரோஸ்கான்-

நான் நானாக இல்லை
என் வலது புறமாக நல்லவையாகவும்
இடது புறமாக தீயவையாகவும்
மேலாகவும் இன்னும் கீழாகவும்
என்னனுமதியின்றி வந்து நிறைந்து
விடுகின்றன எல்லாமான நீர்களும்.
நான் அழுகிறேன்
ஆராவாரம் செய்கிறேன்
ஒப்பாரி வைக்கிறேன்
சினுங்குகிறேன்
யார் யாரோ வந்து
தமது தேவைகளை முடித்துக் கொண்டு
சந்தோசமாய் நகர்ந்து விடுகிறார்கள்.
எனக்குள்ளே நடக்கும்
மூன்றாம் உலகப் போர் பற்றி யாரும்
தெரி;ந்து கொள்ளவோ முற்படவில்லை.
நான் அழுக்காக்கப் பட்டிருக்கிறேன்
நான் விஷமாக்கப்பட்டிருக்கிறேன்
நான் வளம் குறைக்கப்பட்டிருக்கிறேன்
எனது கூக்குரல் யாருக்காவது கேட்கிறதா?
என் ஆயுள் பற்றி யாராவது தெரிந்திருக்கிறிர்களா?
என் மரணம் பற்றி யாராவது சொல்லித்தாருங்கள்
நான் மரணமாகவே விரும்புகின்றேன்.

Series Navigationஉன்னைப்போல் ஒருவன்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 3. சிரிக்கவும் சிந்திக்கவும் ​வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏ​ழை – கலைவாணர்