கதறல்

Spread the love

கு.அழகர்சாமி

ஆம்புலன்ஸ்

காத்திருக்கிறது-

வெள்ளை ஆகாயம் போல் வெண் துணி போர்த்திய உடல்

ஏற்றப்படுகிறது அதில்-

எல்லையற்ற அண்டவெளியில் எதிரொலிக்கிறது

இனி இல்லாமல் போகும் அதன் நிழலின் கடைசிக் கதறல்-

தன் தாயைப் பிடித்துப் போன பின்

தெரு நாய்க்குட்டியொன்றின் கதறல் போல்-

வேறு ஒரு குரலும் பகிர இல்லாமல்.

கு.அழகர்சாமி. (galagarsamy@yahoo.co.in )

Series Navigationஓ பாரதீ