பஞ்சவடியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்

This entry is part 9 of 9 in the series 6 அக்டோபர் 2019

முனைவர் மு.பழனியப்பன் இணைப் பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை             இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் காலம் சிறந்த வாழ்க்கைக் காலம் ஆகும். இயற்கையோடு இணைந்து, தானும் இயற்கையை வளர்த்து ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்து வந்தான். இக்காலத்தில் இயற்கையை எதிர்த்து இயற்கையைச் சுரண்டி அதன் வளத்தைக் கெடுத்து விடும் சூழல்களே உள்ளன. பழைய இலக்கியங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற விழிப்புணர்வு இல்லாத நிலையிலும் சுற்றுச் சூழலைப் பாடுவது […]

சனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு

This entry is part 8 of 9 in the series 6 அக்டோபர் 2019

FEATURED Posted on October 6, 2019 New Organic Compounds Found in Enceladus Ice Grains [October 2, 2019] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++++++++ NASA Cassini Satellite that found New Organic Compounds in Enceladus Saturn’s Moon Enceladus] NASA ‘S Satellite Cassini identifying the Water Sprays ++++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில்பனித்தளம் அடித்தளக் கடலாகக்கொந்தளிக்கும் தென் துருவம் !தரைத்தளம் பிளந்துவரிப்பட்டை  வாய்பிளக்கும் !முறிவுப் […]

BIGG BOSSம் BRAINWASHம்

This entry is part 7 of 9 in the series 6 அக்டோபர் 2019

(லதா ராமகிருஷ்ணன்) பெரியோர்களே தாய்மார்களே! பத்தரைமாற்றுத் தங்கத் தோழர்களே தோழிகளே! சிறுபிள்ளைகளே கைக்குழந்தைகளே! சுற்றியுள்ள சடப்பொருள்களே! சூழ்ந்திருக்கும் அணுத்திரள்களே! ஆகாச வெண்ணிலவே! ஆதவனே! நட்சத்திரங்களே! ஆற்றுமீன்களே! வேற்றுகிரகவாசிகளே! இன்னும் விடுபட்டுப்போன ஜீவராசிகள் விலங்கினங்கள் புள்ளினங்கள் மரம் செடி கொடிகளெல்லாம் _ BIGG BOSS பாருங்கள் – BIGG BOSSஐயே பாருங்கள்! காணக்கிடைக்காத தரிசனம் இது; காணவேண்டியது; கண்ணாடியாய் நம்மைப் பிரதிபலிப்பது; (*பொறுப்புத்துறப்பு: எத்தனை சொல்லியும் உங்களை யதில் காணமுடியவில்லையென்றால் காவல்நிலையத்தில் புகார் தந்துவிடவும்) வீட்டிலும் வெளியிலும் முடிந்தால் […]

தூரத்து விண்மீன்கள்

This entry is part 6 of 9 in the series 6 அக்டோபர் 2019

எதைக் கொண்டும்  நிரப்ப முடியாத  வாழ்வின் கணங்களை  வழிந்தோடும் தேவைகளால்  நிரப்பிக் குடித்து தீர்ந்த போதும்  மீண்டும் அவற்றை  நாடித் திரிகிறோம்  ஆசைகளால்  நிரப்புகிறோம்  அடைந்த பின்னும் தீராமல் ஆசைகள் வழிந்தோட  நமக்கான தருணங்களை தூரத்து விண்மீன்களாக்கி மறைத்தே வைக்கிறோம்  ஒவ்வொரு  விடியலுக்கு முன்பும்                            -மஞ்சுளா  manjulagopi04@gmail.com

கேள்விகள்

This entry is part 5 of 9 in the series 6 அக்டோபர் 2019

மஞ்சுளா எங்கிருந்து முளைக்கின்றன இந்த நினைவு மரங்கள்?  எங்கிருந்து தூவப்படுகின்றன அதற்கான விதைகள்?  பலமாய் பற்றிக்கொள்கின்றன  நம்மீது அதன் வேர்கள்  நாமும் வாழ்கிறோம்  அதன் உயிர்ச்சத்துக்களாய்  கிழைத்துச் செழிக்கும்  அதன் உணர்வுகளில்  சேர்கிறோம் ஒன்றாய்  பிரிகிறோம் பலவாய்  செல்லும் பாதைகளில்  பூக்களைத் தூவும் நம் மனம்  சில நேரங்களில் முட்களையும்….  அதன் மீதே  நடக்கச் செய்கிறோம்  அறியாத  நம் குழந்தைகளின்  சின்னஞ் சிறு பாதங்களையும்  இலையுதிர்க்க தொடங்கிவிட்டது காலம்  பழுத்து உதிரத் தயாராகிவிட்டன கனிகள்  உணர்கிறோம்  நிலையாமை […]

சமூகம்

This entry is part 4 of 9 in the series 6 அக்டோபர் 2019

                                பா. தினேஷ் பாபு  துளிர்த்த பசுமை நிற இலைகளால் நிரம்பிய புங்கைமரம் அதன் பின்புறத்தில் முட்டை ஓட்டிலிருந்து வெளிவர முயலும் பறவை குஞ்சாய் உதய சூரியனின் இளஞ்சிவப்பு… அதற்கு மேற்கே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கிழக்கு நோக்கி அமைந்திருந்தது. தளத்திற்கு 2 ஆக 6வீடுகளை கொண்ட குடியிருப்பின் முதல் தளத்தில் நின்று இக்காட்சிகளில் இனம்புரியாது இலயித்திருந்தான் கையிலைநாதன். அமைதியான குளத்தில் விழுந்த ஒற்றை கல்லாய் அவனது சிந்தை இலயிப்பை கலைத்தது ஒரு குரல். அப்பா […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ்

This entry is part 3 of 9 in the series 6 அக்டோபர் 2019

அன்புடையீர்,                                                                                        சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ் இன்று (2 அக்டோபர் 2019) வெளியிடப்பட்டது. இந்த இதழில் பிரசுரமானவை: கட்டுரைகள்: ஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி  ஜா. ராஜகோபாலன்  நம்ம கையில என்ன இருக்கு?  – ரவி நடராஜன் புத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்!  – சர்வசித்தன் மனதை விட்டு அகல மறுக்கும் தாய் மொழி  ஜூலி ஷெடிவி/ கிருஷ்ணன் சுப்ரமணியன் காண்பவை எல்லாம் கருத்துகளே  – ஹரீஷ்   சிறுகதைகள்: பேத்திகள் – பாகம் 2  – ஆந்தனி மார்ரா/ மைத்ரேயன் அழியாத கோலங்கள்   – கிருஷ்ணன் சங்கரன் 2013 – இன்றே, இப்பொழுதே – அமர்நாத் ஹேங் ஓவர்  – உதயசங்கர்   கவிதைகள்: நீலப்பறவை  – சார்ல்ஸ் புக்காவ்ஸ்கி / ராமலக்ஷ்மி மேப்பிள் மரத்திற்கு ஆயிரமாயிரம் கைகள்  – வேணு தயாநிதி மலையின் நினைவுகளில் – அழகர்சாமி கு. தவிர: […]

ஓ பாரதீ

This entry is part 2 of 9 in the series 6 அக்டோபர் 2019

நீ வாழ்ந்த காலத்தில் நீ எட்டாத சிங்கை இன்று உன் எட்டயபுரமானது உன் தடித்த மீசையும் தலைப் பாகையுமே தமிழானது தமிழ் ஓர் அத்தியாயமாய் என் வாழ்க்கை தமிழே எல்லாமுமாய் உன் வாழ்க்கை ஏட்டுப் படிப்பின்றி இமயம் வென்றாய் காற்றைச் சுவாசித்து கவிதை செய்தாய் பிறப்பும் இறப்புமாய் எல்லார் வாழ்க்கையும் இறப்பே பிறப்பாய் உன் வாழ்க்கை என் கவிதைப் பயிருக்கு பொறுக்குவிதை தந்த ‘நறுக்’ கவிஞனே கொஞ்சம் தள்ளி நில் உன் தாளலடியில்தான் என் தன்மானம் தேடுகிறேன். […]

கதறல்

This entry is part 1 of 9 in the series 6 அக்டோபர் 2019

கு.அழகர்சாமி ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது- வெள்ளை ஆகாயம் போல் வெண் துணி போர்த்திய உடல் ஏற்றப்படுகிறது அதில்- எல்லையற்ற அண்டவெளியில் எதிரொலிக்கிறது இனி இல்லாமல் போகும் அதன் நிழலின் கடைசிக் கதறல்- தன் தாயைப் பிடித்துப் போன பின் தெரு நாய்க்குட்டியொன்றின் கதறல் போல்- வேறு ஒரு குரலும் பகிர இல்லாமல். கு.அழகர்சாமி. (galagarsamy@yahoo.co.in )