கனவுக்குள் யாரோ..?

Spread the love

யாரோ…என் நிழலை மிதித்துப்
போனது போல்…ஒரு சிலிர்ப்பு ..!

யாரோ…என் இதயத்தை
இழுத்துச் சென்றது போல்…ஓர் ஈர்ப்பு..!

யாரோ…என் கனவை
கலைத்தது போல்…ஓர் உணர்வு..!

அதனை போராட்டத்திலும்
யாரோ…என்னை அழைத்தது போல்..ஒரு சுகம்..!

கண்ணைத் திறந்தேன்…
கனவென உணர்ந்தேன்….ஓர் வெறுமை..!

ஓசை இன்றி சொல்லிக்கொள்ளாமல்
இறங்கிப் போகும் ரயில் பயணி…!
உறக்கத்தில் கனவு..!

===============================
ஜெயஸ்ரீ ஷங்கர்…

Series Navigationசன்மானம்அந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை