கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக தமிழ் ஸ்டுடியோவின் கையெழுத்து இயக்கம்…

Spread the love

நண்பர்களே, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பல்வேறு வகைகளில் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகின்றன. திரைப்படம் தொடங்கி இலக்கிய பிரதிகள் வரை ஒரு படைப்பாளி நேர்மையாக தான் நினைத்ததை சொல்லும் போக்கு வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. இதை சொன்னால் அவருக்கு பிடிக்காது, அதை சொன்னால் இவருக்கு பிடிக்காது என்று பல்வேறு வகைகளில் சிந்தித்து, ஒரு படைப்பாளியால் இயங்கிக் கொண்டிருக்க முடியாது. தமிழ்நாட்டில் மதவாத சக்திகளால் அதிகரித்து வரும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்த நிலையை உடனே முதல்வர் கவனத்திற்கும், நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதிக்கும் கொண்டு செல்ல கையெழுத்து இயக்கம் ஒன்றினை தமிழ் ஸ்டுடியோவின் படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் முன்நெடுக்கவிருக்கிறது.

நடந்துக் கொண்டிருக்கும் 38வது சென்னை புத்தகக் காட்சியில் துண்டு சீட்டுகள் வழங்கியும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்களின் கையெழுத்துகளை பெற்றும் இந்த போராட்டம் தொடங்கவிருக்கிறது.

படிமை திரைப்பட பயிற்சி இயக்க மாணவர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு எல்லாரும் தங்கள் ஆதரவினை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். புத்தகக் காட்சியில் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக உங்கள் கையெழுத்துகளை இட்டு வருமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். லட்சக்கணக்கான கையெழுத்துகள் தேவை என்பதால், உங்கள் நண்பர்களுக்கும் இதுப் பற்றி எடுத்துக் கூறி, பரவலாக எடுத்து செல்லவும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Series Navigationஆனந்த பவன் : 22 நாடகம் காட்சி-22பேசாமொழி பதிப்பகத்தின் புதிய புத்தகம் – ஒளி எனும் மொழி (ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்)