கரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜா

அழகியசிங்கர்ஸிந்துஜாவின் 15 கதைகள் அடங்கிய தொகுப்பு இது.  ஸிந்துஜா சில ஆண்டுகள் இலக்கிய உலகத்திலிருந்து காணாமல் போய்விட்டார்.  அதன் பின் ஒரு வேகத்துடன் திரும்பவும் வந்து  இப்போது எழுதி வருகிறார்.


ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமாகவும் கட்டமைக்கிறார்.  ஒட்டு மொத்தமாகக் கதைகள் மூலம் என்ன தெரிவிக்க விரும்புகிறார்.  இவருடைய கதைகளின் பொதுவான அம்சம் என்ன?  பெண்கள்.  பெண்கள்.  பெண்கள்.


இவர் கதைகளில் பெண்கள் விசேஷ கவனத்தைப் பெறுகிறார்கள். இத்தாலி எழுத்தாளர் ஆல்பர் மொராவியாவும் பெண்களை மையப்படுத்தி எழுதுவார்.
இத் தொகுப்பில் உள்ள 15 கதைகளும் ஒவ்வொரு விதம்.

 நிழலுக்குப் பின் வரும் வெயில் என்ற கதையில் லிங்கி என்ற பெண்ணை அறிமுகப்படுத்துகிறார். அக்காவிற்குப் பதில் தான் வேலை பார்க்கும் இந்திராவிடமிருந்து தன் அக்கா குழந்தைக்கு படிப்புக்கு உதவி கேட்பதில் அசாத்திய பொறுமை காக்கிறாள்.  லீலா ஒரு காரணியாக இருக்கிறாள்.  இந்திரா லிங்கிக்கு பணம் கொடுப்பதை அவளுக்குத் தெரிந்த லீலா என்ற தோழி  முன் கொடுக்கிறாள்.  இந்திரா  லீலா மூலம் பிரபலப்படுத்தப் படுகிறாள்.

கதையை முடிப்பதற்கு முன்லிங்கி என்ன நினைக்கிறாள்  யுகாதிப் பண்டிகை அன்றே லீலாக்கா வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று.

கள்ளங்கபடமற்ற லிங்கி என்ற கதாபாத்திரத்தை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறார்.
கரையைக் கடந்து செல்லும் நதி என்ற கதையில் வழக்கம்போல் குடிகார கணவன்.  சாதாரணமாக சாவித்திரி பக்கத்து வீட்டிற்கு வந்திருக்கும் ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும் துரை என்பவனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்.  குடித்து விட்டு வரும் பிரபு அவர்களைப் பார்த்து தப்பாகப் பேசுகிறான்.  வார்த்தைகள் தடித்துப் போய் சாவித்திரியை கண்டபடி திட்டுகிறான்.  ‘உள்ளே வந்து பேசுங்கள்’ என்று துரை அவனை உள்ளே பிடித்து இழுத்துப் போகிறான்.  ஆத்திரம் அடைந்த பிரபு சாவித்திரி முகத்தில் ஓங்கி அடித்து விடுகிறான்.  அதனால் அவள் காதிலிருந்து ரத்தம் சொட்டுகிறது.  பயந்து போய் பிரபு ஓடிவிடுகிறான்.  துரை அவளை தனக்குத் தெரிந்த மருத்துவரிடம் போய் காட்டி சரி படுத்துகிறான்.  உதவி செய்த துரையை முத்தமிடுகிறாள் சாவித்திரி.  அன்பு காட்டுவதில் தப்பில்லை என்கிறாள்.

 “ஆனா நாம நாம்பளா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கிட்டவங்களா, வந்து போற சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் ஒருத்தருக்கு ஒருத்தர் பகிர்ந்துக்கிறவங்களா அன்பா பரிவா இருக்கிறதுக்கு யார் தடை போட முடியும்?” என்கிறாள் சாவித்திரி

இறுதியில்துரையைப்பார்த்து.

பிணைஎன்ற கதையிலும் ஆண்-பெண் உறவு அத்து மீறிப் போய் விடுகிறது.  ஈஸ்வரன் கணவன்.   மாதவன் என்பவனுடம் கள்ள உறவு.  அபிராமி கணவனை விட்டு வர விரும்புகிறாள்.  அவனிடம் எந்தக் குறையையும் காணவில்லை.  ஈஸ்வரன் இல்லாதபோது மாதவன் அபிராமியைப் பார்க்க வருகிறான்.  ஒரு கட்டத்தில் அவர்கள் இருவருக்கும் நடக்கும் விவாதத்தில் மாதவன் அவளைப்பார்த்துச்சொல்கிறான்.

‘நான் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் உன்னை வச்சு காப்பாத்தறதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லே’ என்கிறான்.  அபிராமிக்குக் கோபம் வந்து அவனைத் துரத்தி விடுகிறாள்.  ‘பிணை’ கதையில் காமம்தான் முன் நிற்கிறது.  சுயநலத்தைப் புரிந்து கொண்டபின்துரத்தியடிக்கிறாள்அபிராமி.

எல்லை என்ற கதை காதல் கதை. அமிர்தத்துடன் ஸ்ரீமதி காதல் வசப்பட்டுப் பழகுகிறாள்.  ஆனால் அமிர்தம் அவள் அண்ணன் கோபால் கீழ் வேலை பார்க்கிறான்.  ஆரம்பத்தில் அமிர்தத்திடம் ஸ்ரீமதிக்கு நாட்டமில்லாமல் இருந்தது.   அவர்களுடைய தோழமைக்கு வயது ஒரு காரணமாக இருக்கிறது.  ஸ்ரீமதியைத் திருமணம் செய்வதற்கு வங்கியில் பணிபுரியும் ஒரு அரைக் கிழவனை ஏற்பாடு செய்கிறார்கள்.  ஸ்ரீமதி மறுத்து விடுகிறாள். அமிர்தத்துடன் சகஜமாகப் பழகுவதைத் தவிர அவள் வேறு எதுவும் சிந்திக்க வில்லை. அன்று அமிர்தம் அவள் வீட்டில் சமையல் அறையில் உள்ள பரண் மீது குண்டாவை வைக்கிறான்.  அது கொஞ்சம் நீட்டிக்கொண்டிருந்தது.

பெட்ரூமிலிருந்து ஒலிகள் கேட்டன.  ஸ்ரீமதியால் இதைப் பொறுக்க முடியவில்லை.  அமிர்தத்தையும் அவள் அடைவதற்கு வழி தெரியவில்லை.  தன் ஆத்திரத்தை எப்படி காட்டுவது?  சமையல் ரூமிற்குச் சென்று அண்டாவைத் தள்ளி விடுகிறாள்.  பெட் ரூமிலிருந்து கோபாலும் மன்னியும் சத்தம் கேட்டு வருகிறார்கள்.  ஆனால் ஸ்ரீமதி ஒன்றும் தெரியாத மாதிரி இருக்கிறாள்.  சிக்கல் இல்லாமல்எழுதப்பட்டகாதல்கதை.

சிகரம்‘ என்ற கதை ஒரு வித்தியாசமான கதை.  மாளய பக்ஷத்தை ஒட்டி நிகழ்கிறது.  மாளய பக்ஷத்திற்காக திருவாயாரு பக்கத்தில் உள்ள ஊருக்கு நண்பனுடன் பயணமாகிறான்.  என்பத்தொரு வயதாகிற கண்டு சாஸ்திரி இந்தச் சடங்கை நடத்தி வைக்க வருகிறார்.  தலைமை புரோகிதர் சாமிநாது கண்டு சாஸ்திரியை இன்னும் அவர் ஏற்றுக்கொள்ளும் சடங்குகளுக்குக் கண்டு கொள்ளவில்லை.  வெகுண்டெழுகிறார்.  சாமிநாதுவைப் பார்த்து கோபத்துடன் இது குறித்து வினவுகிறார்.  அவருக்கு காரணம் தெரிகிறது.  அவருடைய பையன்தான் இந்தத் தள்ளாத வயதில் அப்பா இம்மாதிரி புரோகிதம் எல்லாம் போக வேண்டாமென்றுஎச்சரித்ததாக.

  
           ‘என் சொந்தப் பிள்ளையேன்னாலும் அவன் பணம் எனக்கு எதுக்கு?  அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி நான் சாப்பிடற ஒரு வாய் சாதத்தை வேதம்தான் எனக்குப் போடறது,’ எனகிறார். சாமிநாது அவர் கையைப் பிடித்துக்கொண்டு கும்மாணத்தில் நடக்கிற ஒரு வைபவத்திற்கு வரும்படி கூறுகிறார்.  ஏதோ சிகரத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்று முடிக்கிறார் கதாசிரியர்.  

மொத்தத்தில் ஸிந்துஜா கதைகள் படிப்பதற்கு  இயல்பாகவும் பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகமாகவும் இருக்கின்றன.

Series Navigationசின்னக் காதல் கதை