கவிதைகள்

Spread the love

அருணா சுப்ரமணியன்

1. அடைக்கலம்..

சின்னஞ்சிறு குருவி ஒன்று
கூட்டிலிருந்து தவறி விழுந்தது
சிறு அலகும் எழில் சிறகும்
வெகுவாய் கவர
தூக்கி வந்தேன் ……
முப்பதுக்கு நாற்பது
வெறும் கூட்டை
இளஞ்சிறகுகளின் வண்ணம்
வானவில்லாக்கியது…..

2. வினா – விடை

விடைகொடுக்கத் தயங்கியதால்
வினாக்கள் பல சேர்ந்தன..
விடை தெரிந்தும் தெரியாமலும்
விடப்பட்டன வினாக்கள் …
தெரியாத விடைகள்
எதிர்வரும் நேரம்
தெரிந்த விடைகள்
விடைபெறத் தொடங்கின..
புதிய விடைகளும்
பழகிய வினாக்களும்
நிரம்பி வழிகின்றன
என் வழியெங்கும்…..

arunakalamani@gmail.com

Series Navigationஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்ஐஸ் குச்சி அடுப்பு