கவிதைகள் 4

Spread the love

 

உரையாடல்

‘நா சொல்றத

கேக்க மாட்டீங்களா?’

கத்தினாள் அவள்

 

‘நீ என்ன

பில்கேட்ஸ்

இப்புடிச் சொன்னார்

ஸ்டீவ்ஜாப்ஸ்

அப்புடிச் சொன்னார்னா

சொல்லப் போற

அந்த நாடகத்தில

காயத்ரி

இப்புடிச் சொன்னா

கதிர்வேலு

இப்புடிச் சொன்னான்னுதானே

சொல்லப்போற’

அமீதாம்மாள்

 

பயணம்

அவன் மரணித்தான்

மாத்திரைகள் பேசின

‘அப்பாடா!

வந்த வேலை முடிந்தது

இனி அடுத்தவனைப்

பாக்கணும்’

பயணங்கள்

முடிவதில்லை

அமீதாம்மாள்

 

பேசட்டும்

 

‘அவன் எப்படி

அப்படிச் சொல்லலாம்

இவன் எப்படி

இப்படிச் சொல்லலாம்’

கொதித்தான் அவன்

நான் சொன்னேன்

‘நம்மைப் பற்றிப்

பேசுவதே

நாலுபேர்தான்

பேசட்டுமே’

அமீதாம்மாள்

 

எப்போதும் இருப்பேன்

 

செடியைப் பார்த்து

விதை சொன்னது

‘நான்தான் நீயானாய்’

பிஞ்சைப் பார்த்து

பூ சொன்னது

‘நான்தான் நீயானாய்’

காயைப் பார்த்து

பிஞ்சு சொன்னது

‘நான்தான் நீயானாய்’

கனியைப் பார்த்து

காய் சொன்னது

‘நான்தான் நீயானாய்’

விதையைப் பார்த்து

கனி சொன்னது

‘நான்தான் நீயானாய்’

செடியைப் பார்த்து

விதை சொன்னது

‘உங்கள் எல்லாரிடமும்

நானும் இருக்கிறேன்’

 

பிள்ளையிடம் சொன்னேன்

பேரனிடன் சொன்னேன்

‘உங்கள் எல்லாரிடமும்

நானும் இருக்கிறேன்’

 

அமீதாம்மாள்

Series Navigationஅறுபது வயது ஆச்சு !மீட்சி