This entry is part 15 of 15 in the series 9 ஜனவரி 2022

செ.புனிதஜோதி

பாப்பா சிரிக்கிறாள்

இதயத்திற்குள் எட்டிபார்கிறது

வானவில்

 

உதிர்ந்துக் கிடக்கின்றன

நட்சத்திரங்கள்

அவள் சிந்திய சிரிப்பொலி

 

சிரிப்பைக்

கற்றுக்கொள்ளவருகிறது

நிலவிடம் நிலா

 

வாய்விட்டு சிரிக்கிறாள்

வாய்பிளந்து பார்கிறது

அருவி

 

சிரிக்க சிரிக்க

ஊற்றெடுக்கிறது

சுனை

 

பொக்குவாயில்

நீந்திசெல்ல ஆசைப்படும்

சிறுமீனாய் நான்

 

பற்கள் ரயில்பெட்டி

இணையும் முன்

உவகை நீரால்

உடல்முழுதும் குடமுழுக்கு

 

சின்ன சூரியனை

சிரிப்புக்குள் ஒளித்த

தேவதை

 

வண்ணப்பறவையின்

ஒலியின் சாயல்

 

கீறல்விட்ட சுவரும்

ஒட்டிக்கொண்டது

அவள் நாதவொலி

 

செ.புனிதஜோதி

சென்னை

Series Navigationஒரு கதை ஒரு கருத்து