கவிதை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 17 in the series 23 ஜனவரி 2022

கோவிந் கருப்

 
இணையமெங்கும்
வாயால் வடைசுட்டு
பலரும்
கடை விரிக்கிறார்கள்.

இலவச வடைகள்
என்பதனால்

அங்கும் இங்கும்
பறந்து பறந்து
காக்கைகள்
எல்லா வடை கடைகளிலும்
காக்கைகள் –
கொஞ்சம் கொஞ்சம் தின்கின்றன…


செரிக்காத நிலையில்
பல காக்கைகள் 
கடை போடுகின்றன.

வியாபாரம் மட்டுமல்ல
வாழ் சூழலும்
“களை” கட்டுகிறது-
பயிர் வெள்ளாமை இல்லாமல்.

வயிறு நிறைந்தாலும்
பசி ஆறப்போவதில்லை
என்பது-
அறியாதோ காக்கைகள்.

சொறிதலே
சொர்க்கம் எனும் நிலையில்
புரிதலும் தெளிதலும்
காக்கைகள் உலகில்
இல்லையோ?

( கோவிந் கருப் )
 
Series Navigationகவிதைகள்இலக்கியப்பூக்கள் 230
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *