கவிதை

Spread the love

 

ரோகிணி கனகராஜ்

பிரபஞ்சத்தின் வாசலென
கிடக்கிறது பூமி… 
 
வாசல் கூட்டி சுத்தம்
செய்கிறது காற்று… 
 
வாளிநீரென மழைநீர்
தெளிக்கிறது  வானம்… 
 
உதிர்ந்த பூக்கள்
காற்றோடு ஓடிவந்து
கோலம் போடுகின்றன… 
 
பார்த்து பார்த்து ரசித்துக்
கொண்டிருக்கிறான் ரசிகன்… 
 
கணப்பொழுதில் கவிதை
எழுதுகின்றான் கவிஞன்… 
 
பஞ்சபூதங்களும்  அவரவர்
வேலையை சரியாக
செய்கின்றன… 
அதை,
வெறுமனே பார்த்துக்
கொண்டிருக்கிறான்
வெட்டி மனிதன்… 
 
 
Series Navigationவிலாசம்பரிசு…