கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு

Spread the love

ப.கண்ணன்சேகர்

ஜூன் 24. கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு
அந்தாதி வடிவில் கவிதை.

தென்றலை நடத்திய தென்னவன்
திரையினை ஆண்ட மன்னவன்
கோபுரத் தமிழைப் பாடியவன் !

பாடியவன் கவிஞர் கண்ணதாசன்
பாமரன் போற்றும் எண்ணதாசன்
பாடலில் சொன்னான் தத்துவம் !

தத்துவம் புதைந்த சுரங்கமவன்
தமிழ்ச்சுவை நிரம்பிய அரங்கமவன்
வித்தகம் எழுத்தில் காட்டியவன் !

காட்டியவன் வரைந்த காவியமே!
கருத்தென நிலைக்கும் பாநயமே
காலத்தில் மறையா சூத்திரமே!

சூத்திரமே சொன்ன திரைஞானி
சுற்றிடும் இலக்கிய மலர்த்தேனீ!
சாற்றினான் மாபெரும் காவியங்கள் !

காவியங்கள் படைத்த காவியத்தை
கூவியே நானும் அழைக்கின்றேன்
குவலயம் வருவது எப்போது ?

-ப.கண்ணன்சேகர், திமிரி.

Series Navigationஉலகமயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்காப்பியக் காட்சிகள் 10.​பொழுது​போக்குகள், பழக்க வழக்கங்கள்