கவி ருது வான போது

Spread the love

சேயோன் யாழ்வேந்தன்

இலக்கியத்துக்கான மிக உயரிய விருது
எனக்கு வழங்கப்பட்ட இரவில்
பெய்த மழை
நிற்கவே இல்லை
முழு உலகமும் அழிந்து
அப்போதுதான் உருவாகின
இன்றைய பெருங்கடல்கள்
நோவாவின் தெப்பக்கட்டையில்
ஏறித் தப்பிய என்னிடம்
இப்போது சான்றுகள் இல்லை
கனவா நனவா என்றென்னை
எல்லோரும் கிள்ளிப் பார்த்த
தழும்புகள் மட்டும் இன்னும் உள்ளன
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationகாய்களும் கனிகளும்திருக்குறளில் இல்லறம்