காகித முரண்

Spread the love

ஒரு மரம் விடவில்லை
ஒரு சுவர் விடவில்லை
ஊரெல்லாம் விழா பற்றி ”காகித” போஸ்டர்ஸ்
முதல்வர் கலந்து கொள்கிறாராம்
ஊரே விழாக்கோலம் பூண்டது
சிறுவன் படித்துக்கொண்டிருந்தான்
காகிதம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது
விழாவின் பெயர் ஏதோ “மரம் நடுவிழாவாம்”.

அ.லெட்சுமணன்.

Series Navigationசின்னப்பயல் கவிதைகள்அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்